ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி சர்மா 53 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வைஷ்ணவி சர்மா - படம் | ஐசிசி ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி சர்மா 53 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார். இந்திய அணி அதன் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அண்மையில் விளையாடியது. இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. இந்தத் தொடரில் இந்திய அணியின் இளம் வீராங்கனை வைஷ்ணவி சர்மா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வைஷ்ணவி சர்மா, கடைசி ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வைஷ்ணவி சர்மா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 53 இடங்கள் முன்னேறி 94-வது இடம் பிடித்துள்ளார். சயாலி சத்கரே 28 இடங்கள் முன்னேறி 85-வது இடமும், கிராந்தி கௌட் ஒரு இடம் முன்னேறி 24-வது இடமும் பிடித்தனர். பேட்டர்களைப் பொருத்தவரையில், தொடக்க வீராங்கனை பிரதீகா ராவல் மூன்று இடங்கள் முன்னேறி 28-வது இடம் பிடித்துள்ளார். ஷஃபாலி வர்மா எட்டு இடங்கள் முன்னேறி 65-வது இடம் பிடித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் 53 இடங்கள் முன்னேறிய வைஷ்ணவி சர்மா!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗