அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சியின் தோல்வியை இஸ்ரேல் எப்படி பார்க்கிறது?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சியின் தோல்வியை இஸ்ரேல் எப்படி பார்க்கிறது?

பட மூலாதாரம், Getty Images அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு இஸ்ரேலுக்கு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து அந்நாட்டில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில், இஸ்ரேலின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். மிச்சிகன் மகாணத்தில் செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், மைக் ரோஜர்ஸை அப்துல் அல்-சயீத் தோற்கடித்தார். இஸ்ரேலின் முன்னணி ஆங்கில நாளிதழான ஹாரெட்ஸ், அப்துல் அல்-சயீதின் வெற்றி குறித்து எழுதியுள்ளது. "இஸ்ரேலுக்கு எதிரான வலுவான நிலைப்பாடு, போட்டி நிறைந்த இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தடையாக இல்லை என்பதையும் இந்த முடிவு காட்டுகிறது" என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. "செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகள், ஒருங்கிணைக்கப்பட்ட யூத சமூகத்தின் அரசியல் செல்வாக்குக்கு வரம்புகள் இருப்பதை வெளிப்படுத்தின" என்று ஹாரெட்ஸ் எழுதியது. "அல்-சயீத் யூத சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் தலைவர்களையும் சந்தித்தார். ஆனால், இஸ்ரேலுக்கு ஆதரவான வாக்காளர்களைக் கவர்வதற்காக தனது கருத்துகளையோ கொள்கை நிலைப்பாட்டையோ பெரும்பாலும் மாற்றிக்கொள்ளவில்லை" என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவான அமைப்பான தி ஜூயிஷ் மெஜாரிட்டி வெளியிட்ட யூத வாக்காளர்களின் கருத்துக்கணிப்பில், 60 சதவீத வாக்காளர்கள் அல்-சயீதுக்கு வாக்களித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இஸ்ரேலின் என்12 செய்தி தொலைக்காட்சியின் தலைமை அரசியல் ஆய்வாளரான அமித் செகல், இஸ்ரேலுக்கான மோசமான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். "மோசமான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் நடந்தது ஒரு பேரழிவு" என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார். "அப்துல் அல்-சயீத் எதிர்பார்த்ததைவிடக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் செனட் பதவியை வென்றது மட்டுமே ஒரே ஆறுதல். இஸ்ரேலுக்கு எதிரான அரசியலும் யூத எதிர்ப்பும் தங்களுக்குக் கிடைக்கும் வாக்குகளைக் குறைக்கின்றன என்பதை ஜனநாயகக் கட்சியினர் உணர்வார்களா? அப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதே நேரத்தில், ஏராளமான யூதர்களும் அவருக்கு வாக்களித்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. முதலில், அமெரிக்காவின் பிரச்னைகளுக்கு ஜனநாயகக் கட்சியினர் இஸ்ரேலைக் குற்றம்சாட்டினர். மளிகைப் பொருட்களின் விலை உயர்வு, சர்வதேச அளவில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைவது, இரானுடனான போர் ஆகியவை இதில் அடங்கும்" என்று அவர் எழுதியுள்ளார். "ஜே.டி வான்ஸின் எக்ஸ் தளப் பதிவு, குடியரசுக் கட்சியினரும் தங்கள் கட்சியின் பிரச்னைகளுக்கு இஸ்ரேலைக் குற்றம்சாட்டத் தொடங்கியிருப்பதைக் காட்டுகின்றன. அமெரிக்கா இஸ்ரேலுடன் மிக நெருக்கமாகிவிட்டதாக வான்ஸ் தனது பதிவில் கூறியிருந்தார்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "இது மிகவும் ஆபத்தானது. 1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்காவில் இஸ்ரேல் இப்போது மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. அப்போது, ​​அமெரிக்க அதிபர் ஜெரால்ட் ஃபோர்டும் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கரும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஆயுத ஒப்பந்தங்களை நிறுத்திவைத்தனர். இது அமெரிக்காவின் இஸ்ரேல் கொள்கையை மறுபரிசீலனை செய்தல் என்று அழைக்கப்பட்டது" என்று அவர் எழுதியுள்ளார். இந்தச் சூழலுக்குத் தீர்வு காண ஒரே வழி இஸ்ரேலில் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதுதான் என்று செகல் கருதுகிறார். "புதிய தேர்தலுக்கான வாய்ப்புகளைப் பரிசீலிப்பது, அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பது அல்லது தீவிரப் பழமைவாத யூதக் கட்சிகளுடன் சமரசம் செய்துகொள்வது ஆகியவை மிகப்பெரிய தவறாக இருக்கும்" என்று அவர் முடித்துள்ளார். பட மூலாதாரம், Getty Images "குடியரசுக் கட்சிக்கு எதிராக ஜனநாயகக் கட்சி பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றியும், தேர்தலுக்கு முன்பாக அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் சில உறுப்பினர்களிடம் இஸ்ரேல் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருப்பதும், இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இஸ்ரேல் தனது தேர்தல் முடிவுகளில் இன்னும் தெளிவான முடிவை எட்ட முடியாமல் தவிப்பதுடன், இரானுடன் மீண்டும் மோதல் ஏற்படக்கூடிய சூழலையும் எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கியமான தருணத்தில் வெளியாகியுள்ளன" என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. "இப்போது, அமெரிக்காவுடனான இஸ்ரேலின் எதிர்கால உறவும் கேள்விக்குறியாகியுள்ளது. இஸ்ரேலின் மிக முக்கியமான கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது. ஆண்டுதோறும் அமெரிக்கா வழங்கும் பல பில்லியன் டாலர் ராணுவ உதவியும் இதில் அடங்கும். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டிலும் இஸ்ரேலுக்கு பாரம்பரியமாக இருந்து வந்த ஆதரவு குறைந்து வருவதை இது காட்டுகிறது'' என்றும் நியூயார்க் டைம்ஸ் எழுதியுள்ளது ''அமெரிக்காவுடனான உறவில் இரு கட்சிகளிடமும் ஆதரவைப் பெறும் கொள்கையை இஸ்ரேல் எப்போதும் ஏன் கடைப்பிடிக்க முயன்றது என்பதற்கு, இந்த தேர்தல் முடிவுகள்தான் காரணம்" என்று ஜெர்மனிக்கான இஸ்ரேலின் முன்னாள் தூதர் ஜெரமி இசாகரோஃப் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார். நீண்டகால தூதரகப் பணியில் இருந்த இசாகரோஃப், வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தில் இரண்டு முறை பணியாற்றியது உட்பட, அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உத்தி ரீதியான உறவின் பல்வேறு அம்சங்களில் பணியாற்றியுள்ளார். இசாகரோஃப் கூறுகையில், பழமைவாதத் தலைவரான நெதன்யாகு, சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே இந்தக் கொள்கையை பெரும்பாலும் கைவிட்டுவிட்டார். "அமெரிக்க அதிபரை மிகவும் சார்ந்திருக்கும் இஸ்ரேல் பிரதமராக" நெதன்யாகு மாறிவிட்டார் என்றும் அவர் கூறினார். அமெரிக்கத் தேர்தல் நாளன்று, ஆண்டுதோறும் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் சுமார் 4 பில்லியன் டாலர் உதவியை "இந்த ஆண்டின் இறுதியில்" நிறுத்தப்போவதாக டிரம்ப் அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆனால், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய ராணுவ உதவி ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டில்தான் முடிவடைய உள்ளது. ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அரசியல் காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியின் இடதுசாரிப் பிரிவினர் இஸ்ரேலுக்கு எதிராக எழுப்பும் விமர்சனங்களை அவர்களிடமிருந்து அகற்றுவதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார். இடைக்காலத் தேர்தலின்போது, இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் உதவி சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியிருந்தது. பட மூலாதாரம், Getty Images பிரதமர் நெதன்யாகுவுக்கு ஆதரவானதாகக் கருதப்படும் இஸ்ரேலின் சேனல் 14 செய்தி தொலைக்காட்சி இணையதளம், புதன்கிழமை அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டியது. எனினும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெள்ளை மாளிகை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு பதிவை அந்த இணையதளம் சுட்டிக்காட்டியது. அதில் அதிபர் டொனால்ட் டிரம்பின் படத்துடன், "டிரம்ப் இன்னும் உங்கள் அதிபராக இருக்கிறார்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. நீண்ட காலமாக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டின் ஆதரவையும் இஸ்ரேல் பெற்று வந்தது. இதை ஒரு முக்கியமான உத்திசார் பலமாகவும் இஸ்ரேல் கருதியது. ஆனால், அமெரிக்கப் பொதுமக்களின் கருத்துகளில் ஏற்பட்ட மாற்றங்கள், குறிப்பாக 2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய காஸா போர் குறித்த கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றால், இரு கட்சிகளிலும் இஸ்ரேலுக்கான அரசியல் ஆதரவு குறைந்துள்ளது. "தற்போது இரு கட்சிகளும் ஒத்துப்போகும் ஒரே விவகாரம் இஸ்ரேலை விமர்சிப்பதுதான்" என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேலின் முன்னாள் தூதர் மைக்கேல் ஓரென் கூறினார். "ஜனநாயகக் கட்சியினருக்கு இது ஒரு முக்கிய அரசியல் விவகாரமாக மாறியுள்ளது. இப்போது குடியரசுக் கட்சியினரிலும் பெரும் பகுதியினருக்கு இது அத்தகைய விவகாரமாக மாறிவருகிறது" என்று அவர் அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். அமெரிக்காவின் உதவி நிறுத்தப்படுவது, இப்போது அதன் விளைவுகள் வெளிப்படத் தொடங்கியுள்ள ஒரு செயல்முறையின் தொடக்கம் மட்டுமே என்று ஓரென் கூறினார். இஸ்ரேலுடன் உளவுத் தகவல்களைப் பகிர்வதை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இஸ்ரேலின் முக்கிய வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம் உள்ளிட்ட முக்கிய ராணுவ அமைப்புகளின் கூட்டு உருவாக்கப் பணிகளும் நிறுத்தப்படலாம் என்றார். சிஎன்என் தனது செய்தியில், "இரானுடனான போரின்போது அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலை வலுப்பெற்றது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்கள், நெதன்யாகு டிரம்பைத் தன்னுடன் போரில் ஈடுபடச் சம்மதிக்க வைத்ததால் ஏற்பட்ட போர் என்று அமெரிக்க வாக்காளர்களில் ஒரு பகுதியினர் கருதினர்" என்று குறிப்பிட்டுள்ளது. "இரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டும் என்று நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது, எரிபொருள் விலையும் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கக் காரணமான போரை மீண்டும் தொடங்கக்கூடும். இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி மோசமாகச் செயல்பட்டதற்கும் இந்தப் பிரச்னைகள் பங்களித்தன" என்றும் சிஎன்என் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை