ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்பு... ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் விஜய், நடிகை த்ரிஷா - எக்ஸ் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (நவ. 5) மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னணி நடிகர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய், நடிகை த்ரிஷா மற்றும் முதல்வரின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், இந்த நிகழ்ச்சியில், பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெகன் மோகன் இல்லத் திருமணம்! முதல்வர் விஜய் - நடிகை த்ரிஷா பங்கேற்பு!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗