மீசைய முறுக்கு - 2 முதல் நூறு கோடி வானவில் வரை! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (நவ. 6 - 12)

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மீசைய முறுக்கு - 2 முதல் நூறு கோடி வானவில் வரை! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (நவ. 6 - 12)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! - சித்திரிப்பு / விஜய் ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைப் பார்ப்போம். ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை (நவ. 6) வெளியாகிறது. மேலும் இந்தப் படத்தில் கேத்திகா ஷர்மா, சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர் மாஸ்டர், கருணாஸ், யோகிபாபு, நாசர், பகவதி, விஜய் வரதராஜ், யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட நூறு கோடி வானவில் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் நாயகியாக சித்தி இத்னானியின் நடித்துள்ளனர். நீண்ட காலம் கழித்து இப்படம் திரையரங்க வெளியீடாகத் திரைக்கு வராமல் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த திரைப்படம் ஐஆம் கேம். மேலும், இந்தப் படத்தில் கதிர், கயாது லோஹர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜியோ ஹாஸ்டாரில் நாளை வெளியாகிறது. நிகில் பிரேம்ராஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், ஐ. எம். விஜயன் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 7 ஸ்டார் பாய்ஸ். இந்தத் திரைப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ககேஷ் தம்மிநேனி இயக்கத்தில் விக்ரம் சஹிதேவ், சந்தியா வசிஷ்டா, தாரக் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனாகபள்ளி. இந்தத் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை காணலாம். இயக்குநர் பாலாஜி தரணிதரன் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியின் வெளியான திரைப்படம் ’பத்தா’. இதில், நடிகை லிஜோ மோல் ஜோஸ், இன்ஸ்டா பிரபலம் பாலமுருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, குழந்தை நட்சத்திரமான சாய் பிருத்விராஜ் தனது அழுத்தமான நடிப்பை வழங்கியிருந்தார். இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது. இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். தமன் இசையில் ஆக்‌ஷன் படமாக உருவான சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், யோக் ஜபே, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமாரின் இம்மோர்டல் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இம்மோர்டல் திரைப்படத்தை இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருந்தார். கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் குமார், நாயகியாக கயாது லோகர் ஆகியோர் நடித்துள்ளனர். வாலிப மயக்கத்தில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கிக் கொண்ட கதாநாயகன் அதிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே இம்மோர்டல் திரைப்படத்தின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து பிரபலமான நடிகர் சித்துவின் தி டார்க் ஹெவன் திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கின்றன. தி டார்க் ஹெவன் படத்தின் நாயகனாக நடிகர் சித்து, காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் ரித்விகா, தர்ஷிகா, வேல. ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கொரி​ய​ இணையத் தொடரான, ஹியர் வி கோ அகைன் என்ற ​தொடரைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள தொடர் லவ் ஆல்​வேஸ். இதில் கெளரி கிஷன் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடரை 'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். இந்த இணையத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம். ‘அக்கா’ இணையத் தொடரில் கீர்த்தி சுரேஷ் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதை. நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த இணையத் தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி. அக்கா தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை