ட்ரம்ப் தேர்தல் வீழ்ச்சி: இந்தியாவுக்கு சாதகங்களும், சவால்களும் என்னென்ன? - ஒரு பார்வை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
ட்ரம்ப் தேர்தல் வீழ்ச்சி: இந்தியாவுக்கு சாதகங்களும், சவால்களும் என்னென்ன? - ஒரு பார்வை

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தன்னிச்சையான வர்த்தக முடிவுகளாலும், அச்சுறுத்தும் வரி மிரட்டல்களாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் கொந்தளிப்பான பொருளாதாரச் சூழலை எதிர்கொண்டன. அதற்கு தற்போது ஓர் ஆசுவாசம் கிடைத்திருப்பதுபோல், அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளால் உலக நாடுகள் சற்று பெருமூச்சு விட்டுக்கொள்கின்றன. அதிபர் ட்ரம்ப்பின் தீவிரமான பொருளாதாரக் கொள்கைகளுக்கு அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பலத்த முட்டுக்கட்டை போட்டுள்ளனர். அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அவைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. குடியரசுக் கட்சியின் இந்த வரலாற்று பின்னடைவு, வெறும் அமெரிக்க உள்நாட்டு அரசியல் மாற்றமாக மட்டும் பார்க்கப்படாமல், அது உலகளாவிய வர்த்தகச் சூழலின் போக்கை மாற்றி அமைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியா மீதான 18 சதவீத வரிவிதிப்பு அச்சுறுத்தல்களையும், ஹெச்-1பி விசா மீதான ஒரு லட்சம் டாலர் கட்டண உத்தரவையும் தன்னிச்சையாக நிறைவேற்ற முடியாதவாறு ட்ரம்ப்பின் கரங்கள் கட்டப்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் ஈரானுடனான மோதல் மற்றும் அதன் காரணமாக உச்சத்துக்குச் சென்ற கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் நேரடிப் பார்வைக்கு வந்துள்ளன. தற்போது குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை இன்னும் குறையும் பட்சத்தில், அது இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சுமையைக் குறைப்பதோடு சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலையைச் சமன் செய்யவும் பெரிதும் உதவும். அதேவேளையில், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஏகபோக அழுத்தங்களும் தணிந்துள்ளன. ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் முட்டுக்கட்டை விழுந்துள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் இந்த எழுச்சி இந்தியாவுக்கு முற்றிலும் சாதகமானது என்றும் கூறிவிட முடியாது. அதேநேரத்தில், இது இந்தியாவுக்குப் பல வழிகளில் சாதகமான சூழலையும், சில வழிகளில் புதிய சவால்களையும் ஒரே நேரத்தில் உருவாக்கியுள்ளது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை ஒடுக்குவதில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையில் மாற்று சிந்தினை இல்லை. இது இந்தியாவுக்குத் தேவையான ‘இரு கட்சிகளின்’ (Bipartisan) ஸ்திரமான பாதுகாப்பு ஆதரவு தடையின்றி கிடைக்கும். இந்தியாவுக்கு தொடரும் அழுத்தம்: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் அதிபர் ட்ரம்ப்புக்கு பேரிடியாக இறங்கியுள்ளன. இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றியுள்ளதால், ட்ரம்ப்பின் அதிகாரங்களுக்கு கைப்பூட்டு போடப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் இந்த வெற்றி, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்தும். அதேசமயம், ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரை இந்தியா மீதான சுங்க வரிகள் அதிகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது. உள்நாட்டில் சரிந்துள்ள தனது பலத்தை நிரூபிப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக முடிக்க இந்தியா மீதான சுங்க வரி அழுத்தத்தை அதிபர் ட்ரம்ப் அதிகரிக்கக் கூடும். வர்த்தக ஆராய்ச்சி அமைப்பான ‘குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்’ (GTRI)-ன் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா ‘தி இந்து’ ஆங்கிலம் நாளிதழிடம் கூறுகையில், “தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியடைந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்குமாறு இந்தியாவை வற்புறுத்த தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடும். ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பலன் அளிக்காததால், தனது செல்வாக்கை வெளிப்படுத்த உடனடியாக ஒரு வெற்றி தேவை என்பதால், இந்தியா மீது ட்ரம்ப் நிர்பந்தம் செலுத்தலாம்” என்றார். இந்தியா - அமெரிக்க ஒப்பந்த நிலை: 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. ஆனால், இந்தியப் பொருட்கள் மீது 25 சதவீதம் பரஸ்பர வரியையும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்காக மேலும் 25 சதவீத வரியையும் அதிபர் ட்ரம்ப் விதித்ததால் அந்தப் பேச்சுவார்த்தை முடங்கியது. பின்னர் 2026 பிப்ரவரியில் வரிகளை 18 சதவீதமாக குறைக்க ட்ரம்ப் உறுதியளித்தாலும், சர்வதேச அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் ட்ரம்ப் விதித்த வரிகளைச் செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் ஜூலைக்குப் பின் இந்தியாவின் மீது 10 சதவீத வரியை ட்ரம்ப் விதித்தார். இந்தியாவுக்குக் கிடைக்கும் சாதகங்கள்: வரிவிதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரும்: அதிபர் ட்ரம்ப் இனிமேல் தன்னிச்சையாக புதிய வரிகளை விதிப்பது எளிதாக நடக்கப் போவதில்லை. ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி உள்ளதால், ட்ரம்ப்பின் முடிவுகள் தடுத்து நிறுத்தப்படும். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையற்ற வரி உயர்வு பயம் குறையும். ஹெச்-1பி (H-1B) விசா மற்றும் ஐடி துறைக்கு நிம்மதி: புதிய ஹெச்-1பி (H-1B) விசாக்களுக்கு ட்ரம்ப் கொண்டு வந்த ஒரு லட்சம் டாலர் கட்டணம் போன்ற கடுமையான விதிகளை ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பார்கள். அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் திறமையான இந்திய ஐ.டி. ஊழியர்கள் தேவைப்படுவதால், விசா கெடுபிடிகள் தணியும். கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்: ட்ரம்ப்பின் அதிரடி வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் ஈரான் மீதான போர்ச் சூழல் அமெரிக்காவில் கடும் பணவீக்கத்தை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்தது. தேர்தல் தோல்வியால் அதிபர் ட்ரம்ப் இனி தன்னிச்சையாகப் போரை வளர்க்க முடியாது. அதற்கு நிதி ஒதுக்குவதும் கடினமாகும். இதனால் ஈரானுடன் போர் முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது எனப் புவிஅரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா - ஈரான் இடையே போர் தீவிரமடைவதற்கான ஆபத்து குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய் (Brent Crude) விலை பீப்பாய்க்கு 105 டாலராகச் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் வருவது இந்தியாவின் இறக்குமதிச் சுமையைக் குறைத்து, பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இந்திய ரூபாயின் மதிப்பைப் பேணவும் பெரிதும் உதவும். ரஷ்யாவுடனான வர்த்தகம் சீராகும்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்ற ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பும். இதனால் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு எளிதாகும். பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடரும்: இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை முடக்குவது அமெரிக்காவின் இரு கட்சிகளுக்கும் பொதுவான கொள்கையாகும். எனவே 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் ராணுவத் தொழில்நுட்பப் பகிர்வு தடையுமின்றித் தொடரும். கவனம் பெறும் சந்திப்பு: வரும் டிசம்பர் மாதம் புளோரிடாவில் நடைபெறும் ஜி20 (G20) உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நடைபெறவுள்ள பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பு, இருநாடுகளுக்கும் இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சூழலை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை