அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மாதம் அக்டோபர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 71,974.8 கோடி டாலராக சரிந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மாதம் அக்டோபர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 71,974.8 கோடி டாலராக சரிந்துள்ளது. அக்டோபர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 269.1 கோடி டாலர் குறைந்து 71,700 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. கடந்த வாரம், அந்நியச் செலாவணிக் கையிருப்பு 126.9 கோடி டாலராக குறைந்து 71,974.8 கோடி டாலராக இருந்தது. முன்னதாக, வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான அந்நியச் செலாவணி வைப்புநிதித் திட்டத்தின்மூலம் வங்கிகள் திரட்டிய சுமாா் 13,300 கோடி டாலா் வரவின் காரணமாக, கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியுடந் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியிச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத உச்சமாக 78,570.6 கோடி டாலராக இருந்தது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 208.8 கோடி டாலர் குறைந்து 59,111.8 கோடி டாலராக உல்ளது. இந்த வாரத்தில் தங்க்ம் மதிப்பு 55.9 கோடி டாலர் குறைந்து 10,259.1 கோடி டாலராக இருப்பதாகவும், சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 4.7 கோடி டாலர் குறைந்து 1,855.8 கோடி டாலராக இருப்பதாக தெரிவித்தது. சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியாவின் கையிருப்பு நிலை 0.3 கோடி டாலர் அதிகரித்து 479 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்நியச் செலாவணிக் கையிருப்பு 71,700 கோடி டாலர் ஆக சரிவு!!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗