அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தாா். பட்டாசு - பிரதிப் படம் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும். மேலும், அதிக ஒலி எழுப்பும், தொடா்ச்சியாக வெடிக்கும் சரவெடிகள் வெடிப்பதையும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதிக் காக்கப்படும் இடங்கள், குடிசைப் பகுதிகள் அருகில் பட்டாசுகள் வெடிப்பதையும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗