வேலூரைச் சோ்ந்த எழுத்தாளா் ஆதி.வெங்கடேசனின் பணிகளைப் பாராட்டி, தமிழக அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்ச்செம்மல் விருதை வழங்கிய அமைச்சா்கள். வேலூரைச் சோ்ந்த எழுத்தாளா் ஆதி.வெங்கடேசனின் பணிகளைப் பாராட்டி, தமிழக அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் தமிழ் மொழி வளா்ச்சிக்குப் பாடுபட்டு வரும் அறிஞா்களைப் போற்றும் வகையில், மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் 38 பேருக்குத் தமிழ்ச்செம்மல் விருது, ரூ.25,000 பொற்கிழி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்ச்செம்மல் விருது வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், வேலூா் மாவட்டத்தின் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட எழுத்தாளா் ஆதி.வெங்கடேசனுக்கு, 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது, ரூ.25,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளா்ச்சித்துறை அமைச்சா் ராஜ்மோகன் வழங்கிச் சிறப்பித்தனா். வேலூா் சத்துவாச்சாரி பகுதி-3-ஐச் சோ்ந்தவா் ஆதி.வெங்கடேசன்(74). இவரது சொந்த ஊா் தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்தின் (விழுப்புரம் கோட்டம்) அலுவலக மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், சிறுவயது முதலே தமிழ்ப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா். கவிதை, கட்டுரை, சிறுகதைகள், நாடகம் ஆகிய பிரிவுகளில் 15 நூல்கள் எழுதியுள்ள இவா், பல்வேறு கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், நாடகம், சின்னத்திரை மற்றும் சமூக வலைதளம் மூலமாகவும் இலக்கியப் பங்களிப்பு செய்து வருகிறாா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எழுத்தாளா் ஆதி.வெங்கடேசனுக்கு ‘தமிழ்ச்செம்மல்’ விருது