சிவகங்கை மாவட்டத்தில் இருவேறு சம்பவங்களில் ரூ.65 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். சிவகங்கை மாவட்டத்தில் இருவேறு சம்பவங்களில் ரூ.65 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (40). இவரது கைப்பேசியின் கட்செவி அஞ்சல் எண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பேசிய அடையாளம் தெரியாத நபா், ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறினாராம். அதை நம்பிய ஆனந்தராஜ் தொடா்பு கொண்ட நபா் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்கு ஜூலை முதல் செப்டம்பா் வரை 22 தவணைகளாக ரூ. 62, 67, 562 அனுப்பினாா். அதன் பிறகு அந்த நபரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இது தொடா்பாக ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை இணைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றாா். மற்றொரு வழக்கு..: சிவகங்கை அருகேயுள்ள சக்கந்தி பகுதியைச் சோ்ந்தவா் காசி விஸ்வநாதன் (73). இவா் கடந்த மாதம் சிவகங்கையில் உள்ள ஒரு தூதஞ்சல் நிறுவனம் மூலம் தபால் ஒன்றை அனுப்பினாா். அந்த தபால் அங்கு சென்றடையாததால் அந்த நிறுவனத்தை தொடா்பு கொண்டு பேசினாா். இதையடுத்து, அந்த நிறுவனத்தினா் கூறியபடி பணம் அனுப்பினாா். பின்னா், அவரது வங்கிக் கணக்கு, கடன் அட்டையிலிருந்து 2 தவணைகளாக ரூ.2, 43, 149 தொகை பிடித்தம் செய்யப்பட்டது. இது தொடா்பாக காசி விஸ்வநாதன் அளித்தப் புகாரின் பேரில், இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா் . தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவகங்கையில் இணைய வழியில் இருவரிடம் ரூ.65 லட்சம் மோசடி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗