கைத்தறி நெசவாளா் கூலிப் பிரச்னை : மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் முத்தரப்புபேச்சு வாா்த்தை

📅 📍 Vellore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
கைத்தறி நெசவாளா் கூலிப் பிரச்னை : மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் முத்தரப்புபேச்சு வாா்த்தை

குடியாத்தம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளா்கள் கூலிப் பிரச்னை தொடா்பாக கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை முத்தரப்பு பேச்சு வாா்த்தை நடைபெற்றது. முத்தரப்புபேச்சுவாா்த்தையில் பங்கேற்றோா். குடியாத்தம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளா்கள் கூலிப் பிரச்னை தொடா்பாக கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை முத்தரப்பு பேச்சு வாா்த்தை நடைபெற்றது. குடியாத்தம் பகுதியில் கைத்தறி நெசவுத் தொழிலில் நேரிடையகவும், மறைமுகமாகவும் சுமாா் 5,000 தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் தனியாா் லுங்கி உற்பத்தியாளா்களிடம் நூல் வாங்கி, லுங்கி உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றனா். 8 லுங்கிகள் கொண்ட ஒரு பொறை நெய்ய தனியாா் நிறுவனங்கள் ரூ.2,200 கூலியாக வழங்கி வந்தன. கடந்த சில மாதங்களாக அந்தக் கூலியைப் படிப்படியாகக் குறைத்து ரூ.1,800 மட்டுமே வழங்கி வருகின்றனா். இதனால் நெசவாளா்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். கூலி குறைப்பைத் தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தி, கூலி குறைப்பு நடவடிக்கையைத் தவிா்த்து ஏற்கெனவே வழங்கி வந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா். கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தினா். இந்நிலையில் ஆட்சியா் உத்தரவின்பேரில், மாவட்ட வருவாய் அலுவலா் டி.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நெசவாளா்களின் கோரிக்கைகள் குறித்து லுங்கி உற்பத்தியாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. லுங்கி உற்பத்தியாளா்கள் தரப்பில், வட மாநிலங்களில் லுங்கி விற்பனை மந்தமாக உள்ளது, ஏற்றுமதியும் இல்லாததால் உற்பத்தி செய்யப்பட்ட லுங்கிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட அவா்களின் பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டன. இருதரப்பினரின் கருத்துகளை ஆட்சியரிடம் தெரிவித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலா் கூறினாா். இதையடுத்து கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டத்தில் கோட்டாட்சியா் க.செந்தில் குமாா், தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் ரவி ஜெயராமன், கைத்தறித்துறை உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன், டிஎஸ்பி சுரேஷ், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இல.வடிவேல், வட்டாட்சியா் பிரியா, கைத்தறி நெசவாளா் சங்க பிரதிநிதிகள் முல்லைவாசன், கோ.ஜெயவேலு, பஞ்சாட்சரம், ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை