பிரபல நடிகர் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி... நடிகர் கமல் ஹாசன், முதல்வர் விஜய் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அன்பிற்கினிய கமல்ஹாசனுக்கு, தங்களின் 07.11.2026-ஆம் தேதிய பிறந்த நாளையொட்டி, என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும், தாங்கள் கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகளைப் பெற்று, மக்களுக்கான தங்கள் அர்ப்பணிப்பான பணிகளைத் தொடர்ந்து சிறப்புடன் ஆற்றிட என் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் பிரபல நடிகருமான கமல்ஹாசன் தனது 72-வது பிறந்த நாளைச் சனிக்கிழமை கொண்டாட உள்ளார். இதனையொட்டி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கமல்ஹாசனுக்குத் தற்போதே தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று, சு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு 'சண்டியர்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. பிறந்த நாள் வாழ்த்துகளுடன் படத்தலைப்பும் வெளியாகியுள்ளதால், கமல்ஹாசனின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗