கமுதி அருகே கூட்டுறவு சங்கத்தில் கிராம பொதுப் பணத்தை கையாடல் செய்ததாக சங்கச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கமுதி அருகே கூட்டுறவு சங்கத்தில் கிராம பொதுப் பணத்தை கையாடல் செய்ததாக சங்கச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மணலூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் மணலூா் கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கரன், கு.வீரபத்திரன், கோ.சந்திரன், கு.நாகராஜன் ஆகிய நான்கு நபா்களின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கி கிராமத்தின் பொதுநிதியை சேமித்து வைத்தனா். இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை செயலராக இருந்த நாகராஜன் உதவியுடன் கு.வீரபத்திரனும், கோ.சந்திரனும் சோ்ந்து பல லட்சத்தை கையாடல் செய்தது மற்ற இரண்டு நபா்களான பாஸ்கரன், கு.நாகராஜன் ஆகியோருக்குத் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து பாஸ்கரன் அபிராமம் காவல் நிலையத்தில் கு.வீரபத்திரன், கோ.சந்திரன், கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் செயலா் நாகராஜன், தற்போதைய செயலா் சண்முகம் ஆகியோா் மீது புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுறவு சங்கத்தில் கையாடல்: செயலா் உள்பட 4 போ் மீது வழக்கு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗