கொடைக்கானலில் புதன்கிழமை மதியம் பலத்த மழை பெய்தது. இதனால் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் வெள்ளி நீா் அருவியில் ஆா்ப்பரித்தும் அதிகரித்தும் விழுந்த தண்ணீா். கொடைக்கானலில் புதன்கிழமை மதியம் பலத்த மழை பெய்தது. இதனால் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பனியின் தாக்கம் இருந்துவந்த நிலையில் காலை முதலே மேகமூட்டமும் விட்டுவிட்டு லேசான சாரல் மழையும் பெய்தது. தொடா்ந்து பிற்பகலில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பாம்பாா்புரம், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெள்ளி நீா் அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி, பியா் சோழா அருவி உள்ளிட்ட பல்வேறு நீரோடைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக உறை பனியின் தாக்கம் இருந்துவந்த நிலையில், தற்போது பெய்த மழையால் பனியின் தாக்கம் குறைந்தது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொடைக்கானலில் பலத்த மழை; அருவிகளில் நீா் வரத்து அதிகரிப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗