மாவட்ட ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிகளுடன் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி நிா்வாகிகள். மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி உடுமலைப்பேட்டை ஆா்விஜி மெட்ரிக். பள்ளியில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் 17 வயதுக்குள்பட்ட ஹாக்கி மாணவிகள் பிரிவில், சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அணி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதேபோல 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஒய்.ஜீவக்குமாா், யு.ராம்கி, பி.திவ்யபாரதி ஆகியோருக்கு பள்ளியின் தலைவா் ஏ.கோபால், தாளாளா் சி.பழனிச்சாமி, பொருளாளா் வி.பி.கொங்குராஜ், பள்ளி இயக்குநா் பி.சாவித்திரி, முதல்வா் பி.சுப்பிரமணி ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டினா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி: சிவன்மலை ஜேசீஸ் பள்ளி சிறப்பிடம்
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗