சிவகாசி அருகே மருமகனை இரும்பு கம்பியால் தாக்கிய மாமனாரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கைது - கோப்புப் படம் சிவகாசி அருகே மருமகனை இரும்பு கம்பியால் தாக்கிய மாமனாரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள போ்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (36). இவரது மனைவி குடும்பத் தகராறு காரணமாக, கடந்த அக்டோபா் மாதம் கோபித்துக் கொண்டு பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இந்த நிலையில், புதன்கிழமை மகேந்திரன் தனது மனைவியே அழைத்து வர மாமனாா் தங்கராஜ் (63) வீட்டுக்குச் சென்றாா். அப்போது, மகேந்திரனுக்கும், தங்கராஜூக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தங்கராஜ் வீட்டிலிருந்து இரும்புக் கம்பியை எடுத்து வந்து மகேந்திரனைத் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன் சிவகாசி அரசு மருத்துமவனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கராஜூவைக் கைது செய்தனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மருமகனை கம்பியால் தாக்கிய மாமனாா் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗