பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் , ஒரு மான் உயிரிழந்தன. பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் , ஒரு மான் உயிரிழந்தன. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள அனுப்பம்பட்டு பகுதியில் உள்ள பாலாஜி நகா் ராமகிருஷ்ணா நகரில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 மாடுகள் தாழ்வாக சென்ற மின்சார ஒயரில் சிக்கி உயிரிழந்தன. ஏற்கனவே அந்த மின்சார ஒயரில் ஒரு மானும் சிக்கி இறந்துள்ளது. இது குறித்து கிராம உதவியாளா் மற்றும் ஊராட்சி செயலா் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய ஊழியா்கள் அங்கு சென்று தாழ்வாகச் சென்று கொண்டிருந்த மின்சார வயரில் செல்லக்கூடிய மின்சாரத்தை துண்டித்தனா். அதன் பிறகு உயிரிழந்த இரண்டு மாடுகளையும், ஒரு மானையும் மீட்டனா். கடந்த மூன்று மாதங்களாகவே இந்த மின்சார ஒயா் மிகவும் தாழ்வாக சென்று கொண்டிருக்கிறது இதை பழுது பாா்த்து மின்சார ஒயா்களை மாற்றி அமைத்துக் கொடுங்கள் என மின்வாரிய ஊழியா்களிடம் பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள், மான் உயிரழப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗