“முதல்வரே போதையில் இருக்கக் கூடாது” - பஞ்சாப் பேரணியில் பகவந்த் மானை சாடிய ராகுல் காந்தி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
“முதல்வரே போதையில் இருக்கக் கூடாது” - பஞ்சாப் பேரணியில் பகவந்த் மானை சாடிய ராகுல் காந்தி

சங்ரூர்: பஞ்சாப் மாநிலம் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட விரும்பினால், மாநிலத்தின் முதல்வரே போதையில் இருக்கக் கூடாது என்று பகவந்த் மானை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அங்கு தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளன. சங்ரூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, “பஞ்சாபில் போதைப்பொருள் பழக்கம் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. பஞ்சாப் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்தனர். பஞ்சாபில் இருந்து போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்போம் என்று ஆம் ஆத்மி அரசு வாக்குறுதி அளித்திருந்தது. பஞ்சாபின் எந்த பகுதியில் இவர்கள் போதைப்பொருள் பழக்கத்தை ஒழித்துள்ளார்கள்? உண்மை என்னவென்றால், இவர்களால் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க முடியாது. பகவந்த் மான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் எங்களுடன் அமர்ந்து நகைச்சுவையாகப் பேசுவார். ஆனால், காலை 11 மணிக்கே அவர் வாயில் இருந்து மது வாடை வீசும். பகவந்த் மான் மது அருந்துவது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், பஞ்சாப் மாநிலம் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராகப் போராட வேண்டுமானால், மாநிலத்தின் முதல்வரே ஒவ்வொரு நாளும் மது அருந்திக்கொண்டிருக்கக் கூடாது. இளைஞர்களை போதைப்பொருள் புழக்கத்துக்கு தள்ளும் ஆம் ஆத்மி அரசாங்கத்தை மன்னிக்க முடியாது. மாநில மக்கள் நிச்சயமாக அவர்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவார்கள். விவசாயிகளே பஞ்சாபின் முதுகெலும்பு. பஞ்சாபில் விவசாயமும் தொழில்துறையும் வலுப்படுத்தப்படாத வரை, குண்டர்கள் மற்றும் போதைப்பொருள் கலாச்சாரத்துக்கு எதிராகப் போராடுவது சாத்தியமில்லை. நரேந்திர மோடி ஒரு தேசத் துரோகி என்பதை என்னால் ஐந்து நிமிடங்களில் நிரூபிக்க முடியும். நரேந்திர மோடி டொனால்டு ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். ட்ரம்ப் மிரட்டிய 5 நிமிடங்களில், அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். இது குறித்து அமைச்சரவைக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ தெரிவிக்கப்பவில்லை. இந்தியாவின் விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தரவுகளை மோடி ட்ரம்ப்பிடம் ஒப்படைத்தார். தனது நண்பர் அதானியைக் காப்பாற்றவே மோடி இதையெல்லாம் செய்தார். ஏனெனில், அமெரிக்கா உடனான அந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அமெரிக்காவில் அதானிக்கு எதிராக இருந்த வழக்கு கைவிடப்பட்டது. தறபோது பஞ்சாப் அரசாங்கம் டெல்லியில் இருந்து இயக்கப்படுகிறது. அதிகாரத்தின் ஒரு பாதியை அமித் ஷாவும், மறு பாதியை கெஜ்ரிவாலும் தங்கள் வசம் வைத்துள்ளனர். பஞ்சாப் மக்களுக்கு இங்கிருந்து உழைக்கும் ஒரு அரசாங்கம் தேவை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பஞ்சாப் அரசாங்கம், பஞ்சாபில் இருந்தே இயக்கப்பட்டது” என தெரிவித்தார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை