“நலத் திட்டங்களுக்கு ஆதாருக்கு பதிலாக வாக்காளர் அட்டை என்பது சதி திட்டம்!” - ராகுல் காந்தி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
“நலத் திட்டங்களுக்கு ஆதாருக்கு பதிலாக வாக்காளர் அட்டை என்பது சதி திட்டம்!” - ராகுல் காந்தி

புதுடெல்லி: நலத்திட்ட பயனாளிகளைக் கண்டறிய ஆதார் அட்டைக்குப் பதிலாக வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்த முனைவது மிகவும் மோசமான, தீய நோக்கம் கொண்ட ஒரு சதித் திட்டம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘இனி நலத் திட்டங்களுக்கான தகுதியை ஆதார் அட்டைக்குப் பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு அரசு தீர்மானிக்கப்போவதாக மத்திய அமைச்சர் ஒருவர் அறிவித்துள்ளார். இது மிகவும் மோசமான, தீய நோக்கம் கொண்ட ஒரு சதித் திட்டம். இதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்காவிட்டால் இன்னும் பலரது பெயர்கள் நீக்கப்படும். இவர்களில், யாருடைய பெயர்கள் அதிகம் நீக்கப்படுகின்றன? பாஜக மீது அதிருப்தியில் இருப்பவர்களின் பெயர்கள்தான்! வாக்காளர் பட்டியல் என்பது நடுநிலையான தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது அது மோடி அரசாங்கத்தின் ஊழியரான ஞானேஷ் குமாரின் கைகளில் உள்ளது. பாகஜவுடன் இணைந்து வாக்கு மோசடியில் ஈடுபட்டதற்காக, இவரை நாங்கள் ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடித்துள்ளோம். எப்போதுமே பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் வகையில் ஒரு பட்டியலை உருவாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த பட்டியலை வைத்தே மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்குமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படப் போகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று முடிவெடுக்கும் ஒவ்வொருவரின் பெயரும் ஒன்றன் பின் ஒன்றாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். பெயர் நீக்கப்பட்டால் வாக்குரிமை பறிபோகும்; வாக்குரிமை பறிபோனால் அடிப்படை உரிமைகளே பறிபோய்விடும். இதன் விளைவாக ஜனநாயகமே கடத்தப்பட்ட ஒரு சூழலில், நீங்கள் கண்ணுக்குத் தெரியாத குடிமக்களாக மாற்றப்படுவீர்கள். அங்கு மக்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்; மாறாக அரசாங்கமே தனக்கு வேண்டிய மக்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும். இன்று பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள், நாளை ரேஷன் பொருட்கள், ஓய்வூதியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், வீட்டுவசதி, கல்வி உதவித்தொகை அல்லது இடஒதுக்கீடு என அனைத்தும் பாதிக்கப்படலாம். இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான அரசியல் அல்ல; மாறாக, தேர்தல்களைத் திருடுவதற்கும், அதிகாரத்தில் நிரந்தரமாக நீடிப்பதற்குமான ஒரு ஏற்பாடு. வாக்களிப்பது உங்கள் உரிமை, அது எந்த நிபந்தனைக்கும் உட்பட்டதல்ல. ஒரு ஏழையின் ஓய்வூதியத்தை, அவரது வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு பிணைக் கைதியாக மாற்ற முடியாது. இது வெறும் வாக்குத் திருட்டு மட்டுமல்ல. மக்களின் உரிமைகளைப் பறிக்கும் திருட்டு. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை