சென்செக்ஸ் 1,225.07 புள்ளிகள் உயர்ந்து 76,917.85 புள்ளிகளாகவும், நிஃப்டி 370.05 புள்ளிகள் உயர்ந்து 23,810.85 புள்ளிகளாக நிலைபெற்றது. மும்பை பங்குச் சந்தை - (சித்திரிப்பு) மும்பை: கச்சா எண்ணெய் விலை சமீபத்திய உச்சத்திலிருந்து சரிவடைந்ததாலும், வெளிநாட்டு முதலீட்டு வரவு மீண்டும் அதிகரித்ததாலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 4வது வர்த்தக அமர்வாக சுமார் 2 சதவீதம் உயர்ந்து ஏற்றத்துடன் பயணித்தது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,225.07 புள்ளிகள் உயர்ந்து, இன்றைய உச்சபட்ச அளவான 76,917.85 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 370.05 புள்ளிகள் உயர்ந்து, அதன் இன்றைய உச்சகட்ட நிலையான 23,810.85 புள்ளிகளாக நிலைபெற்றது. சென்செக்ஸில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் பவர் கிரிட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, டாடா ஸ்டீல் மற்றும் டிரெண்ட்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு, அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் சரிவு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் மீதான ஆர்வம் அதிகரிப்பு உள்ளிட்ட பொருளாதார அழுத்தம் குறைத்ததால், இந்தியப் பங்குகள் தங்களது மீட்சியைத் தொடர்ந்தன. நிறுவனங்களின் 2வது காலாண்டு வருவாய் முடிவுகள், உள்நாட்டு வளர்ச்சி குறித்த நம்பிக்கையை வலுப்படுத்தியது. நீண்ட காலமாகத் தொடர்ந்து பங்குகளை விற்று வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கியதால், சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்தது. இதன் காரணமாக, நிதி மற்றும் நுகர்வோர் சார்ந்த துறைகளின் பங்குகள் ஏற்றம் கண்டன. நான்கு நாட்களில், சென்செக்ஸ் 3,671.82 புள்ளிகள் உயர்ந்து 5 சதவிகிதமும், நிஃப்டி 1,112 புள்ளிகள் உயர்ந்து 4.89 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 3,114.68 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன. அதே நேரத்தில் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு உயர்வுடன் நிலைபெற்றது. ஐரோப்பாவில் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. அமெரிக்கப் பங்குச் சந்தை நேற்று (திங்கள்கிழமை) பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன. நாஸ்டாக் காம்போசிட் மற்றும் எஸ்&பி 500 குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்த நிலையில், டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஆவரேஜ் உயர்வுடன் நிலைபெற்றது. உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.72 சதவீதம் உயர்ந்து 105.6 அமெரிக்க டாலராக உள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗