தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வளர்ச்சி குறித்து இன்னாள், முன்னாள் நிதியமைச்சர்களின் வார்த்தைப் போர் பற்றி.. தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வளர்ச்சி குறித்து தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் - முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரிடையே காரசார வார்த்தைப் போர் அரங்கேறி வருகிறது. செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் மரிய வில்சனிடம் ஜிஎஸ்டி வளர்ச்சி பற்றி கேட்டபோது, தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் வளர்ச்சி இல்லை, ஜிஎஸ்டி வருவாய் எதிர்மறையாக செல்வதாகக் கூறிக் கொண்டிருந்தார்கள் அக்டோபர் மாதம் 3.2 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. நவம்பர் 2025-ல் இருந்தே சரிவு நிலைதான் இருந்தது. ஆனால் தற்போது அக்டோபரில் வளர்ச்சி அடைந்துள்ளோம். முதல்வரின் முயற்சி காரணமாக இந்த வளர்ச்சி நடந்துள்ளது. இப்போதும் வளர்ச்சி இல்லை என்று கூறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்திருக்கும் தங்கம் தென்னரசு, தமிழகத்தின் தற்போதைய நிதியமைச்சர், எனது பதிவில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையே கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல பதிலளிக்க முயன்றிருக்கின்றார். இந்த வருடம் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளதை என்னுடைய பதிவிலேயே நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். அதே வேளையில், இறக்குமதியினால் கிடைக்கும் வரி வருவாயினால்தான் ஒட்டுமொத்த வரி வருவாயில் உயர்வு காணப்படுகிறதே தவிர, மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரிவருவாயால் அல்ல என்பதையும் நான் எடுத்துக்காட்டி இருக்கின்றேன். அண்டை மாநிலங்களின் வருவாய் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நாம் மிகப்பெரிய அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்ற உண்மயை ஒப்புக்கொண்டு, மாநிலத்தின் சொந்த உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கிப் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்களுக்கும் வழிவகை காண அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை என்று பதிலளித்துள்ளார். ஜிஎஸ்டி பற்றி என்ன சொன்னார் தங்கம் தென்னரசு? முன்னதாக, தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் பதிவில் கூறியிருந்ததாவது, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளம் 23%, ஆந்திரம் 24%, கர்நாடகம் 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருள்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இறக்குமதி ஆகும் பொருள்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன் என்று பதிவிட்டிருந்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வளர்ச்சி! இன்னாள், முன்னாள் நிதியமைச்சர்களின் வார்த்தைப் போர்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗