பிஎல்எம் நிதி நிறுவனத்தில் ரூ.5,000 கோடி மோசடி புகார்: 11 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
பிஎல்எம் நிதி நிறுவனத்தில் ரூ.5,000 கோடி மோசடி புகார்: 11 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: பிஎல்​எம் நிதி நிறு​வனத்​தில் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி புகாரில் தமிழகம், கேரளாவில் 11 இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடத்தியுள்ளது. பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவ்​சிங் கோ ஆப்​ரேடிவ் சொசைட்டி லிமிடெட் (பிஎல்​எம்) நிறுவன அதிபர் கேரளாவைச் சேர்ந்த பிரேம்​குமார். சென்​னையை தலை​மையிடமாகக் கொண்டு 2006-ல் தொடங்​கப்​பட்ட இந்​நிறு​வனம் தமிழகம், கேரளா, புதுச்​சேரியில் செயல்​படுகிறது. பொது​மக்​களிடம் இருந்து டெபாசிட்​டாகப் பெற்ற பணத்தை பிரேம்​குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களின் வங்​கிக் கணக்​கு​களுக்கு மாற்​றியதாகப் புகார் எழுந்​தது. மேலும், முதலீட்​டாளர்​களின் பணத்​தைத் தனிநபர்​கள் மற்​றும் பிற நிறு​வனங்​களுக்​குத் திருப்​பி​விட்​டதுடன், காஞ்​சியில் 300 ஏக்​கர் நிலம் வாங்​கியது, ஹோட்டல்​கள், ரிசார்ட்​டுகள், திரையரங்​கு​களில் முதலீடு செய்​தது, கேபிள் டிவி நிறு​வனம் ஒன்​றுக்கு ரூ.16 கோடி பரிமாற்​றம் செய்​தது என சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி​யில் ஈடுபட்​ட​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்​தது. இது​தொடர்பாக கேரள பொருளாதார குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் வழக்கு பதிந்து அக்.29-ம் தேதி சென்னை விருகம்​பாக்​கம் வீட்​டில் பிரேம்​குமாரை கைது செய்​தனர். தொடர்ந்து, கேரள நீதி​மன்​றம் அவருக்கு ஜாமீன் வழங்​கியது. இதற்​கிடையே, சட்ட​விரோத பணப்​பரிமாற்றம் தொடர்​பாக கொச்சி அமலாக்கத் ​துறையும் தனியாக வழக்​குப் பதிவு செய்து விசா​ரணையைத் தொடங்​கியது. இதன் ஒருபகுதி​யாக, நேற்று பிரேம்​குமாரின் விருகம்​பாக்​கம் வீடு, கோயம்​பேடு அலு​வல​கம், புழல் மற்​றும் கொளத்​தூரில் உள்ள டிராவல்ஸ் அதிபர் பாலாஜி​யின் அலு​வல​கம், வீடு, வேப்​பேரி​யில் உள்ள ரியல் எஸ்​டேட் மற்​றும் நிதி நிறு​வன அலு​வல​கம், வானகரம் உள்​ளிட்ட இடங்களில் சோதனை நடத்​தப்​பட்​டது. மேலும் கோழிக்கோடு, கொச்சி உள்​ளிட்ட பகுதி​களி​லும் சோதனை நடை​பெற்​றது. இரு மாநிலங்​களி​லும் மொத்​தம் 11 இடங்​களில் நடத்​தப்​பட்ட இந்​தச் சோதனை​யில், முக்​கிய ஆவணங்​களை அமலாக்​கத்துறை அதி​காரி​கள் கைப்​பற்​றியதாக தகவல் வெளியாகி​யுள்​ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை