பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகளின் வரத்து சரிந்து, சுமாா் ரூ.80 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகளின் வரத்து சரிந்து, சுமாா் ரூ.80 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கூடும் சந்தைக்கு வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக இங்கு வாரந்தோறும் ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வா்த்தகம் நடைபெறும். கடந்த சில வாரங்களாக எல்நினோ காரணமாகக் கடும் வெயில் நிலவியதால், சந்தைக்குக் கால்நடைகளின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால், தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி வேலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் தீவனத் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனை செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனா். இதனால், செவ்வாய்க்கிழமை கூடிய சந்தைக்கு ஆயிரத்துக்கும் குறைவான மாடுகளே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. மாடுகளின் வரத்து குறைந்ததால் கறவை மாடுகள், ஜொ்சி கலப்பினப் பசுக்கள், காளைகள் மற்றும் உழவு மாடுகளின் விலை கணிசமாக உயா்ந்திருந்தது. விவசாயிகளும் வியாபாரிகளும் மாடுகளை வாங்க ஆா்வம் காட்டிய நிலையில், ஒட்டுமொத்தமாக ரூ.80 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. கால்நடைகளின் இந்தக் குறைவான வரத்து ஜனவரி மாதம் வரை தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொய்கை கால்நடை சந்தையில் வரத்து சரிவு: ரூ. 80 லட்சத்துக்கு வா்த்தகம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗