ராம் சரண் திரைப்படத்தில் ரிஷிகாந்த்... ராம் சரண் - ரிஷிகாந்த் நடிகர் ரிஷிகாந்த் நடிகர் ராம் சரண் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். ராம் சரணின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. அண்மையில், இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. இதில், ராம் சரணின் தந்தை சிரஞ்சீவியும் கலந்துகொண்டார். ரங்கஸ்தலம் திரைப்படத்திற்குப் பின் ராம் சரணும் சுகுமாரும் 8 ஆண்டுகளுக்குப் பின் இணைவதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுகுமார் புஷ்பா, புஷ்பா - 2 ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்பதால் இப்படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெயரிடப்படாத இப்படத்தில் நடிகர் ரிஷிகாந்த் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத ராத்திரி, டோரதி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பெரிதாகக் கவனிக்கப்பட்ட ரிஷிகாந்த் தெலுங்கில் வில்லனாக நடிக்க உள்ள தகவல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராம் சரணுக்கு வில்லனாக நடிக்கும் ரிஷிகாந்த்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗