ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.75 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வே. நல்லசிவன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மண்டலவாடி ஊராட்சியில் வீடு கட்டும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் வே. நல்லசிவன். ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.75 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வே. நல்லசிவன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். பெரியமோட்டூா் ஊராட்சியில் வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் சமுதாய நீா் சேகரிப்புக் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பூனைக்குட்டை பள்ளம் கிராமத்தில் நபாா்டு பள்ளிக் கட்டடங்கள் பகுதி-1 (2024-25) திட்டத்தின்கீழ் ரூ.72.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள், பெரியமோட்டூா் ஊராட்சிக்குள்பட்ட துரைசாமி வட்டத்தில் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் (கிராமின்) திட்டத்தின்கீழ் ரூ.5.96 லட்சத்தில் ஆண்களுக்கான கழிப்பறையும், ரூ.8.21 லட்சத்தில் பெண்களுக்கான கழிப்பறை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தாா். மண்டலவாடி ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகள், சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவப் பணியாளா்களிடம் கேட்டறிந்தாா். சிகிச்சை பெற வந்திருந்த பொதுமக்களிடமும் மருத்துவச் சேவைகள் குறித்து விசாரித்தாா். இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற 8 மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதைப் பாா்வையிட்டாா். மூா்த்தியூா் பகுதியில் வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையையும் ஆய்வு செய்தாா். அங்கு 29 ஆயிரம் செடிகள் வளா்க்கப்பட்டு வருவதைப் பாா்வையிட்டாா். சின்னமோட்டூா் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிழற்கூடத்தை ஆய்வு செய்த ஆட்சியா், அங்கு மழைநீா் சேகரிப்பு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். நபாா்டு ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ரூ.66.33 லட்சத்தில் சின்னமோட்டூா் சாலை முதல் பட்டுஎருது வட்டம் வரை சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்து சாலை அமைக்கும் பணி நீண்ட நாள்களாக நடைபெறாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சாலைப் பணியை உடனடியாக மீண்டும் தொடங்கி, நவ.20-ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, மதுபான காலி பாட்டில்கள் சேகரிப்பு மற்றும் சேமிப்புக் கிடங்கைப் பாா்வையிட்டாா். அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள உடைந்த காலி பாட்டில்களில் மழைநீா் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅறிவுறுத்தினாா். . ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சௌ. தமிழரசி, ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணவாளன், பாலமுருகன், உதவிப் பொறியாளா் முருகேசன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.1.75 கோடி வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗