சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் சேதுபதி விருது வழங்குவது குறித்து... அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் முதல் இந்தியராக நடிகர் விஜய் சேதுபதி விருது வழங்கவுள்ளார். சர்வதேச அளவில் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்காவில் சர்வதேச எம்மி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் 54-ஆவது சர்வதேச எம்மி விருதுகள் விழா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நவ. 23-ல் நடைபெறுகிறது. இந்த நிலையில், எம்மி விருது நிகழ்ச்சியில் விருது வழங்கும் முதல் இந்தியராக நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்கவுள்ளார். எம்மி விருது வழங்குவதன் மூலம் நாட்டுக்கு பெருமை கிடைத்துள்ளதாக திரைத்துறையினர் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் முதல் இந்தியர் விஜய் சேதுபதி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗