சசிகுமார் நடிக்கும் திரைப்படத்தின் பெயர்... நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ’யாத்திசை' திரைப்பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் இந்தியாவிற்குள் நுழைய பர்மா மீது படையெடுத்த போது நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இதில் சேயோன், பவானி, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். ஜே.கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்துக்கு சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்தக் கல்யாணி இசையமைக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், இப்படத்திற்கு டெத் இரயில்வே (Death railway) எனப் பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இரண்டாம் உலகப்போருக்கான காட்சிகளுடன் கூடிய இந்த டீசர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சசிகுமாரின் புதிய திரைப்படப் பெயர்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗