சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை - பின்னணி என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை - பின்னணி என்ன?

பட மூலாதாரம், cuddalore.nic.in சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி அதனை சீரமைப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழு ஒன்றை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு புதன்கிழமையன்று (நவம்பர் 4) உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள், டி.ஆர்.ரமேஷ் உள்பட நான்கு பேர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனம் தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறையின் அரசாணையை எதிர்த்தும் கோவிலின் பழமையான கட்டுமானங்கள் மற்றும் வருமானக் கணக்குகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதியன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், 'கடந்த 12 ஆண்டுகளாக கோவிலுக்குக் கிடைத்த வருமானம் குறித்து முழுமையான மற்றும் உண்மையான கணக்குகளை பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை' எனக் கூறப்பட்டுள்ளது. பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தின்கீழ் கோவிலின் பழமையான கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கோவிலுக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் புதிய கட்டுமானங்களை மேற்கொண்டிருப்பதன் மூலம் கோவில் சொத்துகள் முறைகேடாக நிர்வகிக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது' என உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். கோவில் நிர்வாகத்தில் தலையிடுவது அவசியம் எனக் கூறிய நீதிபதிகள், நிர்வாகக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தனர். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு 'ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமாரை இணைத் தலைவராகவும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.ராஜேந்திரனை உறுப்பினராகவும் பொது தீட்சிதர்களின் செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் செயலாளர் ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்' எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. 'கோவில் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை, புதிய நிர்வாகக் குழு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்' எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவில் சொத்துகள், கணக்கு வழக்குகள் மற்றும் பிற நிர்வாக விவகாரங்களை கண்காணிக்கும் பொறுப்பும் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துகளை மீட்பது, நிலுவையில் உள்ள வாடகையை வசூலிப்பது, கனகசபையில் அனைவரும் நின்று தரிசனம் செய்வதற்கான சமவாய்ப்புகளை உறுதி செய்தல் போன்ற பணிகளையும் நிர்வாகக் குழு மேற்கொள்வது தொடர்பாகவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அதேநேரம், 'கோவிலின் அன்றாட வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள் ஆகியவை காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள் மற்றும் வழக்கங்களுக்கு உட்பட்டு பொது தீட்சிதர்களின் அதிகாரத்துக்குள் இருக்கும்' எனவும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருந்தது. உயர் நீதிமன்றத்தில் உத்தரவு, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 26ன்படி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோவில் நிர்வாக உரிமையில் தலையிடுவதாகக் கூறி பொது தீட்சிதர்கள், ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் உள்பட நான்கு பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு, புதன்கிழமையன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது ஏறி கடவுளை வழிபடுவது தொடர்பான சர்ச்சைகள் கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து தொடங்கின. கடலூரை சேர்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி கனகசபையின் மீது ஏறி தேவாரம் பாட முயன்றதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறநிலையத்துறை ஆணையர் அனுமதியளித்தும் சர்ச்சைகள் நீடித்தன. கடந்த 2022-ஆம் ஆண்டு கனகசபையில் ஏறி ஜெயசீலா என்ற பெண்மணி வழிபாடு நடத்த முயன்றார். அவரை வழிபாடு நடத்தவிடாமல் தீட்சிதர்கள் முற்றுகையிட்டனர். இதனைக் கண்டித்து காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சிவனடியார்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து, 'கனகசபை மீது ஏறி வழிபாடு நடத்தலாம்' எனக் கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் அரசாணை ஒன்றை இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டது. இந்த அரசாணை தங்களுடைய பாரம்பரிய நிர்வாக உரிமையில் தலையிடுவதாகக் கூறி பொது தீட்சிதர்கள் எதிர்த்தனர். 'இது பக்தர்களின் வழிபாட்டு உரிமை. அதைத் தீட்சிதர்கள் தன்னிச்சையாகக் கட்டுப்படுத்த முடியாது' என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கனகசபை தரிசன அரசாணையை எதிர்த்து வழக்குகளும், கோவிலின் பழமையான கட்டுமானங்கள், சொத்துகள் மற்றும் வருமானக் கணக்குகள் தொடர்பான மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பட மூலாதாரம், cuddalore.nic.in நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அமர்வில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 30) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், '2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அடிப்படையில் பொது தீட்சிதர்கள் வசம் கோவில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், கோவிலை அவர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை' என நீதிபதிகள் தெரிவித்தனர். 'கடந்த 12 ஆண்டுகளாக கோவிலுக்குக் கிடைத்த வருமானம் குறித்து முழுமையான மற்றும் உண்மையான கணக்குகளை பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை' எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கோவில் வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பாக பொது தீட்சிதர்களும் இந்து சமய அறநிலையத்துறையும் தாக்கல் செய்த கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 'உரிமைகளை மீறுவதற்கான அனுமதிச் சீட்டு அல்ல' பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தின்கீழ் கோவிலின் பழமையான கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கோவிலுக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் புதிய கட்டுமானங்களை மேற்கொண்டிருப்பதன் மூலம் கோவில் சொத்துகள் முறைகேடாக நிர்வகிக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிற்பங்களுக்கும் சுவரோவியங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. கோவிலின் தொன்மையான சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை சேதப்படுத்திக் கட்டுமானம் மேற்கொண்டது தொடர்பாக பொது தீட்சிதர்கள் தரப்பில் ஏற்கும்படியான விளக்கம் அளிக்கப்படவில்லை' என நீதிபதிகள் கூறியுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்கும் உரிமை பொது தீட்சிதர்களுக்கு இருப்பதாக, 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிமன்றம், 'அந்த உரிமை மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான அனுமதிச் சீட்டு அல்ல' எனக் கூறியது. 'மேலும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகள் மீறப்படும்போதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும்போதும் அரசு நிர்வாகம் தலையிடுவதைத் தடுக்க முடியாது' எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி பொது தீட்சிதர்கள் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் தரப்பில் பிரமாணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தினந்தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். கனகசபையில் இடவசதி குறைவாக இருப்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன" எனக் கூறியிருந்தார். இதனைத் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள், "நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது தீட்சிதர்கள் செயலாளர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை" எனத் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்ட பிறகே பக்தர்கள் கணிசமான அளவு அனுமதிக்கப்பட்டதாக பக்தர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை தீட்சிதர்கள் தரப்பில் மறுத்தாலும் கூட்டம் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டனர். கோவில் நிர்வாகத்தில் முறைகேடு இருப்பதால் அரசு தலையிடலாம் எனத் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள், ''அதைக் காரணமாக வைத்துக்கொண்டு நிரந்தரமாக அரசின் மேற்பார்வையில் வைத்திருக்க முடியாது. அவ்வாறு செய்வது அரசியலமைப்புச் சட்டம் மதப் பிரிவினருக்கு வழங்கியுள்ள நிர்வாக உரிமைக்கு எதிரானது'' எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை