அர்ஜுன் தாஸ் கேரள காவல்துறை அதிகாரியாகவும், சஞ்சனா தமிழ்நாடு காவல்துறை அதிகாரியாகவும் ஜன் டோவில் நடித்துள்ளனர். எந்த வகையிலான படம் எடுத்தாலும் மனித உணர்வுகள்தான் எனது படங்களின் முக்கிய அம்சம் என இயக்குநர் மதுமிதா தெரிவித்துள்ளார். அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ஜான் டோ (John Doe). இப்படம் நவம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் மதுமிதா பேசியதாவது: ஜான் டோ திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட ஆதரவளித்த கார்த்திக் சுப்புராஜ், விஜய் ஆண்டனி, லோகேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், புஷ்கர் – காயத்ரி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தமிழில் இப்படத்தைத் தயாரித்திருப்பது எங்களுக்குப் பெருமை. தயாரிப்பாளர்கள் ஷோபு, பிரசாத் மற்றும் அவர்களுடைய குழுவினர் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்தனர். என்னுடைய உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இரவு பகலாக உழைத்திருக்கிறார்கள். எந்த ஜானரில் திரைப்படம் உருவாக்கினாலும் மனித உணர்வுகள்தான் என்னுடைய படங்களின் முக்கிய அம்சமாக இருக்கும். ‘ஜான் டோ’ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர். கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் கதை நடைபெறுகிறது. அர்ஜுன் தாஸ் கேரள காவல்துறை அதிகாரியாகவும், சஞ்சனா தமிழ்நாடு காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் எனக்கு ஒரு அக்கா கிடைத்திருக்கிறார் என்றால் அது அர்ச்சனா மேடம்தான். அவர் எனக்குப் படப்பிடிப்புத் தளத்தில் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். இந்த நிகழ்ச்சியில் வழங்கிய சிவப்பு நிற டெடி பியருக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் சில குறைகள் இருந்தாலும் நான் போதுமா!? என்ற கேள்வி மனதில் அடிக்கடி எழும் , நாம் போதும்!!! என உணர்த்துவதற்காக தான் அதை வழங்கினோம். ஒரு நல்ல கணவராக, மனைவியாக, குழந்தையாக, நடிகராக அல்லது தொழில்நுட்பக் கலைஞராக இருக்கிறோமா என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதற்கான பதில், நம்மிடம் குறைகள் இருந்தாலும் நாம் நம்முடைய இடத்தில் சிறந்தவர்கள்தான் என்பதுதான். ஒரு இயக்குநருக்கான உண்மையான அங்கீகாரம் பார்வையாளர்களிடமிருந்துதான் கிடைக்கும். நெட்ஃபிளிக்ஸ், ஜீ தமிழ், திவோ மற்றும் ஏஜிஎஸ் போன்ற நிறுவனங்கள் படத்தைப் பார்த்துவிட்டு எங்களுடன் இணைந்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘ஜான் டோ’ திரைப்படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” நன்றி என மதுமிதா குறிப்பிட்டார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மனித உணர்வுகள்தான் என் படங்களின் முக்கிய அம்சம்: இயக்குநர் மதுமிதா
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗