ராவடி படத்தின் முதல் பாடல் வெளியானது குறித்து... ராவடி. - படம் - எக்ஸ் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ராவடி படத்தின் முதல் பாடல் புதன்கிழமை (நவ. 4) வெளியானது. சிறை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கவனம் ஈர்த்த அக்ஷய் குமார் நாயகனாவும் அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்திலும் உருவான படம் ராவடி. இப்படத்தில் பாசில் ஜோசப், ஜாஃபர், ஐஷ்வர்யா ஷர்மா, ஜான் விஜய், சத்யன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ’அட்ரா பரமா’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை பற்றி காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராவடி படத்தின் முதல் பாடல் வெளியீடு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗