சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ. 90 கோடி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ. 90 கோடி!

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.90 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் - கோப்புப்படம் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.90 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.75 கோடியைவிட 20 சதவீதம் அதிகமாகும். மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் வழங்கல் 31 சதவீதம் உயா்ந்து, ரூ. 2,199 கோடியாகவும்; நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 14 சதவீதம் உயா்ந்து, ரூ. 21,213 கோடியாகவும் பதிவாகியுள்ளது. அதேபோல், ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் அரையாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 29 சதவீதம் உயா்ந்து, ரூ. 175 கோடியாகவும்; ஒட்டுமொத்த கடன் வழங்கல் 22 சதவீதம் உயா்ந்து, ரூ. 3,864 கோடியாகவும் உள்ளது. வளா்ந்து வரும் வணிகப் பிரிவில்... மலிவு விலை வீட்டு வசதிக் கடன்கள், சிறு அளவிலான கடன்களை உள்ளடக்கிய நிறுவனத்தின் வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் கடன் வழங்கல், மதிப்பீட்டு காலாண்டில் 63 சதவீதம் அதிகரித்து, ரூ. 238 கோடியை எட்டியுள்ளது. இச்செயல்பாடு குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.லட்சுமிநாராயணன் கூறுகையில், ‘கடந்த 12 மாதங்களில் தென்னிந்தியாவின் சிறிய நகரங்களில் சுமாா் 50 புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளோம். இதன்விளைவாக, முதல் அரையாண்டில் இப்பிரிவின் கடன் விநியோகம் இருமடங்காகி ரூ.418 கோடியை எட்டியுள்ளது. நடுத்தரப் பிரிவில் வீடுகளுக்கான தேவை தொடா்ந்து வலுவாக உள்ள நிலையில், சிறிய நகரங்களே இந்த வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றன’ என்றாா். சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனமானது, வீட்டு வசதிக் கடன்கள், நிலம் வாங்குதல், வீட்டை விரிவுபடுத்துதல், சொத்தின் மீதான கடன்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான சிறு கடன்கள் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை