தலைமை நீதிபதி குறித்த சர்ச்சைப் பதிவு - கேரள காங். நிர்வாகிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
தலைமை நீதிபதி குறித்த சர்ச்சைப் பதிவு - கேரள காங். நிர்வாகிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

புதுடெல்லி: தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறித்து வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவு தொடர்பாக, கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், கடந்த அக்டோபர் 12-ம் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்தை குறிவைத்து பதிவு ஒன்று போடப்பட்டது. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானதை அடுத்து அக்கட்சியினர் அந்தப் பதிவை நீக்கினர். பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சன்னி ஜோசப், ‘இந்தப் பதிவு குறித்து தலைமைக்குத் தெரியாது. இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட நபர் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நீதித் துறையின் நடுநிலையை தங்கள் கட்சி கேள்விக்குள்ளாக்கவில்லை’ என தெரிவித்திருந்தார். இந்தப் பதிவு தொடர்பாக வழக்கறிஞர் வினீத் ஜிண்டால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். பின்னர், இது ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் ப்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கலாம். ஆனால், கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தி நீதித்துறையை அச்சுறுத்தவோ அல்லது நீதி நிர்வாகத்தில் தலையிடவோ கூடாது. நீதிமன்றத்தின் அதிகாரம் சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது. நீதித் துறை காட்டும் நிதானத்தை பலவீனமாகக் கருதிவிட வேண்டாம்’ என அறிவுறுத்தினர். மேலும், கேரள பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவருக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்ட சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், அந்தப் பதிவு நிர்வாகிகளின் அனுமதியின்றி வெளியிடப்பட்டதாகவும், பின்னர் அது நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், கட்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த நீதிபதி அரவிந்த் குமார், இந்த மன்னிப்பு வெறும் எழுத்து வடிவில் உள்ளதா அல்லது மனப்பூர்வமானதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்யும் என்றார். இந்த விவகாரம் சிவில் நீதிமன்ற அவமதிப்பா அல்லது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பா என்பதை ஆய்வு செய்ய மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தார், சித்தார்த் அகர்வால் ஆகியோரை நியமிப்பதாகவும் அமர்வு அறிவித்தது. மேலும், அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியின் உதவியையும் நீதிமன்றம் கோரியுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை