தமிழகத்தில் இன்று நியாயவிலைக் கடைகள் வழக்கம்போல் செயல்படுவது குறித்து... தமிழகத்தில் இன்று நியாயவிலைக் கடைகள் வழக்கம்போல் இயங்கும்... - பிரதிப் படம் தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகள் வெள்ளிக்கிழமை (நவ. 6) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள்களாகவும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கு ஏதுவாக மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நவ. 6-ஆம் தேதி அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் இன்று நியாயவிலைக் கடைகள் வழக்கம்போல் இயங்கும்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗