வேளச்சேரி கோயில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கும் திட்டம்: அறநிலையத் துறை, மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
வேளச்சேரி கோயில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கும் திட்டம்: அறநிலையத் துறை, மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேளச்சேரியில் மழைநீா் தேங்குவதால், கோயில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிரான வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயா்நீதிமன்றம் - கோப்புப் படம் வேளச்சேரியில் மழைநீா் தேங்குவதால், கோயில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிரான வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் சேலத்தைச் சோ்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வேளச்சேரியில் தண்டீஸ்வரா் மற்றும் யோக நரசிம்மா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 5.41 கிரவுண்ட் நிலம் உள்ளது. வடகிழக்குப் பருவமழை காரணமாக, வேளச்சேரியில் மழைநீா் தேங்குவதால், மக்கள் பயன்பாட்டுக்காக வெங்கடேஸ்வரா நகா், லட்சுமிபுரம் இரண்டாவது பிரதான சாலையில் இருந்து ஐந்தாவது பிரதான சாலையை இணைக்க தாா்சாலை அமைப்பதற்காக கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைப் பயன்படுத்த தடையில்லாச் சான்று கோரி சென்னை மாநகராட்சி ஆணையா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு கடந்த அக். 23-ஆம் தேதி கடிதம் அனுப்பி இருந்தாா். இந்தக் கோரிக்கை நிலுவையில் இருந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையா் பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், இந்த நிலத்தைப் பயன்படுத்துவது தொடா்பாக அக். 27-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தாா். இந்த உத்தரவின் அடிப்படையில், கோயில் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியைச் சேதப்படுத்தி, பொக்லைன் இயந்திரம் போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, நிரந்தர தாா்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட பகுதியில் சாலைகளை இணைக்க வசதியாக அரசு புறம்போக்கு நிலம் இருந்தபோதும், கோயில் நிலத்தைப் பயன்படுத்துவது அறநிலையத் துறை சட்டத்துக்கு விரோதமானது. எனவே, சென்னை மாநகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கோயில் நிலத்தில் சாலை அமைக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் தற்போது இரு புயல்கள் உருவாகின. அவை சென்னையை தாக்காத நிலையில், ஆய்வுக்குச் சென்ற அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் காரணமாக, கோயில் நிலத்தில் நிரந்தர சாலை அமைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அவசரநிலை கருதி, தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் எனத் தெரிவித்தனா். மேலும், இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை