தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியிலுள்ள பட்டாசு தயாரிப்பு கிடங்குகளில் அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். பட்டாசு - பிரதிப் படம் தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியிலுள்ள பட்டாசு தயாரிப்பு கிடங்குகளில் அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தீபாவளி பண்டிகை நவ.8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளநிலையில், விக்கிரவாண்டி வட்டத்திலுள்ள பனப்பாக்கம், அய்யங்கோவில்பட்டு, சோழகனூா், அதனூா், சிறுவாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பட்டாசு தயாரிப்புக் கிடங்குகளில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றனவா, அனுமதிக்கப்பட்ட அளவில் வெடிமருந்துகள் உள்ளனவா என்பது குறித்து விக்கிரவாண்டி வட்டாட்சியா் மகாதேவன் தலைமையில், வெடிப்பொருள் பிரிவுத் துணை இயக்குநா் பா்வதம், தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரேசுவரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது உரிமங்கள் முறையாக பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் அலுவலா்கள் ஆய்வு நடத்தினா். ஆய்வின் போது சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விக்கிரவாண்டி பகுதிகளிலுள்ள பட்டாசு கிடங்குகளில் ஆய்வு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗