ஆனந்த் தேவரகொண்டாவின் ‘ஜெய் ஜெய் கணேசா’ திரைப்படம் பற்றி... ஆனந்த் தேவரகொண்டா தெலுங்கில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம், தற்போது தமிழில் ‘ஜெய் ஜெய் கணேசா’ என்ற பெயரில் வெளியாகத் தயாராகி வருகிறது. தென்னிந்திய முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பியும் நடிகருமான ஆனந்த் தேவரகொண்டா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஜெய் ஜெய் கணேசா’. மேலும், இப்படத்தில் நயன் சாரிகா மற்றும் பிரகதி ஸ்ரீவத்சவா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜ் அருண் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த முழுநீளப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது. உதய் பொம்மிசெட்டி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஆதித்யா ஒளிப்பதிவு செய்ய, சேத்தன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். பாடல்களை சுவிஸ் தமிழ்மகள், பாமகன், ஜோ பைந்தமிழ் ஆகியோர் எழுதியுள்ளனர். தற்போது இப்படத்தைத் தமிழில் ‘ஜெய் ஜெய் கணேசா’ என்ற பெயரில் வெளியிடத் தயாராகி வருகின்றனர். விஜய் மாதவன் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ் உருவாக்கப் பணிகளை ஏ.ஆர்.கே. ராஜராஜா மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் ஆனந்த் தேவரகொண்டா முதன்முறையாகத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகவுள்ளார். முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் கணேசா’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஆனந்த் தேவரகொண்டாவின் ‘ஜெய் ஜெய் கணேசா’!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗