விவோ நிறுவனத்தில் புதிதாக வி வரிசையில் அறிமுகமான ஸ்மார்ட்போன்களில் எது சிறந்தது என்பது குறித்து... விவோ வி80, விவோ வி70, விவோ வி10 எலைட் - படம் / நன்றி - விவோ விவோ நிறுவனத்தில் புதிதாக வி வரிசையில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் ஆரம்ப விலை ரூ. 62,999. அதிகபட்சமாக ரூ.70,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், எவை சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறித்து காணலாம். விவோ ஸ்மார்ட்போன்கள் 6.59 அங்குல அமோலிட் திரை கொண்டவை. 2750×1260p திரை ரெசல்யூஷன் உடையவை. திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 5,000nits திறன் கொண்டவை. விவோ வி80 ஸ்மார்ட்போனில் திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது. விவோ வி70 ஸ்மார்ட்போனில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது, கண்ணாடி ஃபைபரால் செய்யப்பட்ட பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது. விவோ வி80, விவோ வி70 ஸ்மார்ட்போன்களில் ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் 7, 4 ஆம் தலைமுறை சிப்செட் கொண்டது. விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் 8எஸ், 3 ஆம் தலைமுறை சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. விவோ வி80 ஆரிஜின் ஓஎஸ் 7 ஆன்டிராய்டு 17 இயங்குதளம் கொண்டது. விவோ வி70 வரிசையானது ஆரிஜின் ஓஎஸ் 6 ஆன்டிராய்டு 16 இயங்குதளம் கொண்டவை. விவோ வி80 - 7,200mAh பேட்டரி திறன் கொண்டது. விவோ வி70, வி70 எலைட் - 6,500mAh பேட்டரி திறன் கொண்டவை. அனைத்து ஸ்மார்ட்போன்களும் 90W வையர் சார்ஜிங் திறன் கொண்டவை. விவோ வி80 50MP + 8MP அல்ட்ராவைட் + 50MP ஓஐஎஸ் கேமரா கொண்டது விவோ வி70, வி70 எலைட் 50MP + 8MP அல்ட்ராவைட் + 50MP டெலிபோட்டோ கேமரா கொண்டது. அனைத்து போன்களும் 50MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. விவோ வி80 விலை ரூ. 62,999. விவோ வி70 விலை ரூ. 59,999. விவோ வி70 எலைட் விலை ரூ. 66,999 அனைத்தும் 8GB + 256GB நினைவகம் கொண்டவை. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விவோ வி80, விவோ வி70, விவோ வி10 எலைட்! விலை எவ்வளவு? எது சிறந்தது?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗