WTM London 2026 கண்காட்சியில் தனி அரங்கு.. கர்நாடகா சுற்றுலாவை மேம்படுத்த பெரிய பிளான்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Events ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
WTM London 2026 கண்காட்சியில் தனி அரங்கு.. கர்நாடகா சுற்றுலாவை மேம்படுத்த பெரிய பிளான்!

லண்டன்: 'வேர்ல்ட் டிராவல் மார்க்கெட்' லண்டன் 2026 கண்காட்சியில் கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் புதிய அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த அரங்கை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ராஜ்யசபா எம்பி சுதா மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்து பி2பி சந்திப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. World Travel Market என்பது உலகளவில் சுற்றுலா பயணம் தொடர்பான துறையை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டு வரும் கண்காட்சியாகும். 'World travel Market - London 2026 கண்காட்சி லண்டனில் தொடங்கி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கர்நாடகாவின் சுற்றுலா தலங்களுக்கு ஐரோப்பிய நாட்டினரை கொண்டு வரும் வகையில் புதிய அரங்கு திறக்கப்பட்டு இருந்தது. இதனை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் ராஜ்யசபா எம்பி சுதா மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். கர்நாடகாவை உள்ளடக்கிய புதிய சுற்றுலா பேக்கேஜ்கள் மற்றும் சர்வதேச அளவிலான சுற்றுலா கூட்டணியை உருவாக்குவது தான் இதன் முக்கிய நோக்கமாகும். இதனால் சர்வதேச அளவிலான டூர் ஆபரேட்டர்கள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியர்களின் சுற்றுலா திட்டத்தில் கர்நாடகாவில் உள்ள இடங்களை அதிகமாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா சுற்றுலாத்துறையின் அரங்கை திறந்து வைத்த பிறகு கர்நாடக பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்துரையாடினார். அப்போது அவர், ''கர்நாடகாவில் கடலோர கர்நாடகா, மலநாடு பகுதிகளின் சுற்றுலா வளர்ச்சி மற்றும் விளம்பரத்துக்கு நல்ல முயற்சி எடுத்துள்ளீர்கள். மேற்குத் தொடர்ச்சி மலைகள், கடலோரப் பகுதிகள், இயற்கை நிறைந்த இடங்கள் உள்ளிட்டவை கர்நாடகாவின் சுற்றுலாவை மேம்படுத்துகிறது'' என்று கூறினார். கர்நாடகாவை எடுத்து கொண்டால் தனது சுற்றுலா இடங்களுக்கு சர்வதேச பயணிகளையும் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 'வேர்ல்ட் டிராவல் மார்க்கெட்' தளத்தில் கர்நாடகா தனது பாரம்பரியம், கலாசாரம் பற்றியும், அங்குள்ள சுற்றுலா தளங்கள், வனவிலங்கள், கடலோர பகுதகிள், மலநாடு உள்பட மாநிலத்தின் பல்வேறு வகையில் சுற்றுலா தொடர்பான விஷயங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக சிக்கமகளூர், குடகு போன்ற மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள காபி தோட்டங்கள் மற்றும் காபி தோட்டத்துக்குள் இருக்கும் தங்கும் வசதிகள், உணவு பழக்க வழங்கள், இயற்கையோடு இணைந்த உணர்வு கொடுக்கும் வகையிலான விஷயத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தியது. அதேபோல் கடலோர கர்நாடகாவில் உள்ள கடற்கரைகள், பாரம்பரியம், உணவு மற்றும் புதிய டூரிஸ்ட் சர்க்கியூட்டுகள் மூலம் சுற்றுலா பயணிகளை கவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கர்நாடகா சுற்றுலாத் துறை செயலாளர் டாக்டர், ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், ''முதல்வர் டிகே சிவக்குமார் தலைமையில் சுற்றுலாத் துறை அமைச்சர் கேஜே ஜார்ஜ் வழிக்காட்டுதலில் சர்வதேச அளவில் நாங்கள் கர்நாடகாவின் சுற்றுலா தலங்களை விளம்பரப்படுத்தி வருகிறோம். இதனை உண்மையான வணிக வாய்ப்புகளாக மாற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். லண்டனில் கடலோர கர்நாடகா-மலநாடு, காபி , வனவிலங்குகள் மற்றும் பாரம்பரிய சுற்றுலாவுக்குச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. கர்நாடகாவில் அதிகமான சுற்றுலா பயணிகளை கொண்டு வருவது தொடர்பாக பி2பி சந்திப்புகள் நடத்தப்பட்டு வருகிறது'' என்றார். கர்நாடகாவின் சுற்றுலா தலங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்கனவே மான்செஸ்டரில் முதன்முறையாக ரோட்ஷோ நடத்தப்பட்டது. அடுத்ததாக பர்மிங்ஹாமில் சிறப்பு ரோட்ஷோவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை