தோனியின் மாஸ்டர் பிளான்: சி.எஸ்.கே தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
தோனியின் மாஸ்டர் பிளான்: சி.எஸ்.கே தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்

எம்.எஸ். தோனியின் பரிந்துரையின் பேரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் ஒரு வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ். தோனியின் பரிந்துரையின் பேரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டீபன் பிளெமிங் கிளப்பில் இருந்து விலகியதை அடுத்து காலியான இந்த இடத்திற்கு ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 47 வயதான இவர், 2018 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராகவும், 2024 இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாகவும் பணியாற்றியுள்ளார். ஜாகீர் கானுக்கு நீட்டிப்புக்கான வாய்ப்புடன் கூடிய ஒரு வருட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கானை உறுதிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஜாகீரின் புகழ்பெற்ற ஆட்டத்திறனும், இளம் திறமைகளை வளர்த்தெடுக்கும் அவரது நிரூபிக்கப்பட்ட திறனும் நமது அணிக்கு ஒரு மதிப்புமிக்க சேர்க்கையாகும். அவரது வழிகாட்டுதல் இந்த பிரான்சைஸின் அடித்தளத்தை வலுப்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். தனது நியமனம் குறித்துப் பேசிய ஜாகீர் கான், "ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக நான் சிஎஸ்கேவை களத்தில் எதிர்த்து விளையாடியிருக்கிறேன், அந்த போட்டிகளை மிகவும் ரசித்திருக்கிறேன். சேப்பாக்கத்தில் 'சூப்பர் பேன்ஸ்' உருவாக்கும் வளிமண்டலம் இதை மேலும் சிறப்பானதாக்குகிறது. இவ்வளவு பணக்கார வரலாற்றைக் கொண்ட இந்த பாரம்பரிய அணியில் சேர என்னால் காத்திருக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார். ஹேமங் பதானியும் இந்தப் பதவிக்கான பரிசீலனையில் இருந்தவர்களில் ஒருவர். ஆனால் வேட்பாளர்கள் இந்த விதிகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வார்களா என்பதில் கேள்விக்குறி இருந்தது. பிளெமிங் விலகிய பிறகு, ஒரு இந்திய பயிற்சியாளரையே நியமிக்க பிரான்சைஸ் விரும்பியது. அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக பல வேட்பாளர்களிடம் பேசிய பிறகு, இறுதியாக ஜாகீர் கானை தேர்வு செய்துள்ளனர். சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "எம்.எஸ். தோனி தான் ஜாகீரின் பெயரைப் பரிந்துரைத்தார். ரூபா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் அடங்கிய கிரிக்கெட் நிர்வாகக் குழுவும் அவர் இந்தப் பொறுப்பிற்குப் பொருத்தமானவர் என்பதில் உடன்பட்டது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகளுடன் ஐபிஎல்-லில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு, அவர் சரியான தேர்வு என்று உணர்ந்தோம்" என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே செய்திகளில் வெளியானதைப்போல, பிளெமிங்கிற்குப் பதிலாக அடுத்தவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தோனியிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. தோனி பல்வேறு வேட்பாளர்களிடம் பேசினார். அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு, கடந்த சில நாட்களாக உரிமையாளர்களுடனும், போட்டியில் இருந்த சிலருடனும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். தோனியின் எதிர்காலம் குறித்து பேசிய விஸ்வநாதன், தற்போதைய நிலவரப்படி "அவர் ஒரு வீரராகக் கிடைக்கப்பெறுவார்" என்று கூறினார். பிரான்சைஸ் நிர்வாகம் முழுமையாக ஐபிஎல் தொடரில் மட்டும் கவனம் செலுத்தும், உலகளவில் உள்ள பிற பிரான்சைஸ்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு பயிற்சியாளரையே விரும்பியது. 2011 இல் இந்திய அணி உலகக்கோப்பையைக் வென்றபோது அணியில் இடம்பெற்றிருந்தவரும், தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் கூட்டு முதலிடத்தைப் பிடித்தவருமான இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் இந்த எதிர்பார்ப்பிற்குச் சரியாகப் பொருந்துகிறார். ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் 'ஆண்ட்வெர்ப் ஆங்கர்ஸ்' அணியின் இணை உரிமையாளராக இருப்பதைத் தவிர, உலகளாவிய வேறு எந்த லீக்கிலும் அவருக்குத் தொடர்பு இல்லை. இது அவரது குடும்பத்திற்குச் செலவிட நேரத்தையும் அளிக்கிறது. மேலும் அவரது வேலை செய்யும் விதம், அமைதியான மனநிலை ஆகியவை சிஎஸ்கேவின் தளர்வான அணிச் சூழலுக்கு ஏற்றதாகப் பார்க்கப்படுகிறது. "ஜாகீர் கானை விட சிறந்த ஒரு பயிற்சியாளரை எங்களால் பெற்றிருக்க முடியாது," என்று காசி விஸ்வநாதன் கூறினார். "அவரை இந்தப் பொறுப்பை ஏற்கச் சம்மதிக்க வைப்பது எளிதாக இல்லை, ஏனெனில் அதற்கு சிறிது காலம் பிடித்தது. ஆனால் இறுதியில் அவர் இதில் இணைய ஒப்புக்கொண்டார்." தனது உதவிப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஜாகீர் கான் அவகாசம் கேட்டுள்ளார், அதற்கு பிரான்சைஸும் ஒப்புக்கொண்டுள்ளது. "அவர் தனது உதவிப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெறுவார்" என்று விஸ்வநாதன் தெரிவித்தார். ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் ராஜீவ் குமார் ஆகியோர் தங்களது பொறுப்புகளில் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், ஒரு வெளிநாட்டு வேட்பாளரை, குறிப்பாக பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிற்காக பிரான்சைஸ் இன்னும் தேடி வருகிறது. இந்தத் தேடல் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. மெகா ஏலத்திற்கு முன்பாக தற்போதைய சுழற்சியில் ஒரு வருடம் மட்டுமே எஞ்சியிருப்பதாலும், புதிய பயிற்சியாளர் ஏற்கனவே இருக்கும் வீரர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதாலும், சில வேட்பாளர்களே இந்தச் சவாலை ஏற்க ஆர்வமாக இருந்தனர். டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மினி ஏலத்திற்கு முன்னதாக வீரர்களைத் தக்க வைப்பதை இறுதி செய்வதே ஜாகீர் கானின் உடனடிப் பணியாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மூன்று சீசன்களாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியுள்ளது. மேலும் வருவாயிலும் நேரடிப் பாதிப்பைச் சந்தித்துள்ளதால், வரும் சீசனில் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்திலும் அழுத்தத்திலும் பிரான்சைஸ் உள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை