'ஆற்றில் சில நிமிடங்களில் உயர்ந்த நீர்மட்டம்': கேரளத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு - 9 பேர் பலி

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
'ஆற்றில் சில நிமிடங்களில் உயர்ந்த நீர்மட்டம்': கேரளத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு - 9 பேர் பலி

பட மூலாதாரம், Handout கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன ஒருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மலப்புரம், இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் பல இடங்களில் சாலைகளில் மண் மற்றும் பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பட மூலாதாரம், Handout மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே பூக்கோட்டும்பாடம்–அமரம்பலம் பகுதியில் உள்ள கோட்டப்புழா ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டி.கே. காலனி மற்றும் ஓளர்வட்டம் கடவு பகுதிகளில் ஆற்றின் நீர்மட்டம் எதிர்பாராத வகையில் சில நிமிடங்களில் உயர்ந்ததால் ஆற்றிலும் கரையோரத்திலும் இருந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கினர். ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை காலை தேடுதல் பணி மீண்டும் தொடங்கிய பின்னர் மேலும் மூன்று உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து கோட்டப்புழா ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. காணாமல் போன ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. திரூர் பகுதியைச் சேர்ந்த முகமது குட்டி, எடரிக்கோடு பகுதியைச் சேர்ந்த அனஸ் மங்காடன், கருவாரக்குண்டைச் சேர்ந்த ரஹீம், வண்டூர் பகுதியைச் சேர்ந்த சஜ்ஜாத் மற்றும் ரஃபீக் ஆகிய 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவரின் பெயர் சஜிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தப் பகுதி சமீப காலமாக சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அனில்குமார் மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். End of அதிகம் படிக்கப்பட்டது ஆற்றில் நீர்மட்டம் தற்போது குறைந்துள்ளதால் தேடுதல் பணியை முழுவீச்சில் மேற்கொள்ள முடிவதாகவும், காணாமல் போன நபரை விரைவில் கண்டுபிடிக்க முடியும் என்று நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட மூலாதாரம், Handout இடுக்கி மாவட்டம் வட்டவடை அருகே கொட்டக்கம்பூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கொட்டகையில் அவர்கள் இருந்த போது இந்த துயரம் நேரிட்டது. ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடுக்கி மாவட்டத்தின் அடிமாலி, பழம்பள்ளிச்சால் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பட மூலாதாரம், Handout பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இடுக்கி மாவட்டத்தில் கனமழையை தொடர்ந்த நிகழ்வுகளில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேசன் செருவாட் தெரிவித்துள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். பத்திரிகையாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், நேற்றைய மழைக்கு முன்னதாக அந்தப் பகுதியில் குறிப்பிட்ட எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றார். "அபாயகரமான மழை குறித்து எந்த எச்சரிக்கையும் இருக்கவில்லை. எதிர்பாராத விதமாகவே வானிலையில் மாற்றம் ஏற்பட்டது" என்று அவர் கூறினார். மாவட்ட நிர்வாகம் தற்போதைய சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார். இடுக்கி மலைப்பகுதிகளில் இரவு நேரப்பயணத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாலை 7 மணிமுதல் காலை 6 மணிவரை மலைப்பகுதிகளில் இரவு பயணத்தை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். அரம்பல்லிச்சாலில் நிலச்சரிவு ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட ஆட்சியர், அங்கு உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சாலைகள், மலைப்பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், Handout கோட்டயம் மாவட்டத்திலும் கனமழை மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தீக்கோயி அருகே வேலத்துச்சேரியில், ஈராட்டுப்பேட்டை–வாகமண் சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் சென்னையைச் சேர்ந்த 35 வயது சங்கீதா அருள்லால் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையோர மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததில் அவர் பலியானார். மற்றொரு சம்பவத்தில் பூஞ்சார் பகுதியில் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில் 80 வயதான ஜோசப் உயிரிழந்தார். ஒரே நாளில் நடந்த இந்த இருவேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்ததாக ஆட்சியர் தெரிவித்தார். பட மூலாதாரம், Handout கோட்டயம் மாவட்டத்தில் மீனச்சிலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஈராட்டுப்பேட்டை, தீக்கோயி, வாகமண் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்திப்பட்டுள்ளது. மண் சரிவு காரணமாக வாகமண்–ஈராட்டுப்பேட்டை சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு–கேரள எல்லையை ஒட்டிய வாகமண் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. விடுமுறை நாளையொட்டி வாகமண் சென்றிருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சில இடங்களில் காட்டாற்று வெள்ளம், சேறு மற்றும் சாலையில் விழுந்த மண், கற்களால் சிக்கின. இதனால் சிலர் பல மணி நேரம் சிரமத்துக்குள்ளாகினர். மழை அதிகம் பெய்யும் மலைப்பகுதிகளில் சுற்றுலா மற்றும் சாகச நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பட மூலாதாரம், Handout கேரளத்தில் மழை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் வி.டி. சதீசன் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை ஆணையர் வி. விக்னேஸ்வரி ஐஏஎஸ், இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, உள்ளூர் நிலவரத்திற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். இரு மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. மலப்புரம் நிலம்பூர்–அமரம்பலம் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தைத் தொடர்ந்து சிறப்பு பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளத்தில் அடுத்த சில நாட்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என்றும், ஆற்றங்கரைகள், தாழ்வான பகுதிகள் மற்றும் அபாயகரமான மலைப்பகுதிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மலப்புரம் கோட்டப்புழா ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 5 பேர், இடுக்கி வட்டவடையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர், கோட்டயம் மாவட்டத்தில் ஏற்பட்ட இரு தனித்தனி மண் சரிவு சம்பவங்களில் 2 பேர் என, கேரளத்தில் கனமழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை