தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் உசிலம்பட்டியில் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாக தகவல். தேர்தல் வாக்குறுதியான தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் வருகிற 28ஆம் தேதி துவங்கி வைக்க உள்ளார் இந்நிலையில் திட்ட துவக்க விழா நிகழ்ச்சி முதலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ த.வெ.க. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை, மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி, தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என அறிவிப்பு வெளியானது.இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் முதலமைச்சர் விஜய் வெளிநாடு சென்றதால், இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இந்த திட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி மருத்துவமனையில் சில ஏற்பாடு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் இடம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு நடைபெற இருப்பதாகவும், அதற்கு தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த ஏற்பாட்டு பணிகளை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா வீட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் 28-ந்தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. உசிலம்பட்டியில் துவக்க விழா ஏற்பாடுகள் நடந்த நிலையில் முதலமைச்சருக்கு பாதுகாப்பு, மக்கள் கூட்டம் உள்ளிட்ட சில காரணங்களுக்கா மதுரைக்கு மாற்றப்பட்டது.மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கப்பேறு சிகிச்சை பிரிவில் முதலமைச்சர் விஜய் தங்க மோதிர திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்க இருக்கிறார் என்றார். மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றும் அறிவிப்பு வந்தவுடன் ஏற்பாடுகள் தொடங்கப்படும் என்றும் கூறினர். மாற்றுக் கட்சியில் சேர்ந்ததால் ஊரை விட்டு தள்ளி வைப்பு: நடவடிக்கை தேவை! – வானதி சீனிவாசன் CSK-வின் தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்! இரவு 9 மணி வரை 19 மாவட்டங்களில் மழை! “ஊழலுக்கு எதிரான அரசியல் உண்மை என்றால் தவெக, இடதுசாரிகளை ஆதரிக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் பதிலடி! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
தாய்மாமன் தங்க மோதிர திட்ட துவக்கவிழா : மதுரைக்கு மாற்றப்பட்டதாக தகவல்?
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk