அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்.வி. தினேஷ். இவர், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, குக்கூ, விசாரணை உள்ளிட்ட முக்கியத் திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து, இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’லப்பர் பந்து’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தச்சூழலில் தான், இவரது 26-வது திரைப்படம் அறிமுக இயக்குனர் மதி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ZERO LOGIC. MADNESS MAGIC! 💥🤪Introducing THE #BANDHAGANGS 🔥Here’s wishing our Stone Cold, VE.RA. DINESH, @vr_dineshravi a very HAPPY BIRTHDAY and a blockbuster year ahead! 🥳 @anandhiactress @LingeshActor @vels_64 @mathi_anand @TheLiStudioz @dsathyaprakash#VRD26 pic.twitter.com/Ff8mZxFHiu இந்தப் படத்தில் கயல் ஆனந்தி, லிங்கேஷ், சுபா வரதராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முழு நீள காமெடி படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெறும் தருவாயில் உள்ளது, இந்தச் சூழலில் தான், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ, நடிகர் வீ ஆர் தினேஷ் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு, ’பந்தா கேங்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தினேஷ் நடிக்கும் 'பந்தா கேங்ஸ்' வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!! #BANDHAGANGS
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk