பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய பேச்சுக்கு த.வெ.க-வினரின் எதிர்ப்பைச் சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி, தற்போது தனது அகில இந்திய நற்பணி இயக்கத்திற்கு புதிய தலைமை ஒருங்கிணைப்பாளரை நியமித்து அமைப்பை வலுப்படுத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் இந்த திடீர் நகர்வு அவர் அரசியலில் களமிறங்குவதற்கான ஆயத்தமா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது. பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்து த.வெ.க-வினரிடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தனது 'அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின்' தலைமை ஒருங்கிணைப்பாளராக பி. பிரசாத் என்பவரை நியமித்து ரசிகர் மன்ற அமைப்புகளை தீவிரமாக மறுசீரமைத்து வருகிறார். இந்த திடீர் நகர்வு அவர் அரசியலில் களமிறங்குவதற்கான ஆயத்தமா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது. பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே நடைபெற்ற ‘சட்டமன்றம்’ சார்ந்த நிகழ்வை நெறிப்படுத்திப் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "பிரச்சனைகளும் சவால்களும் வரும்போது எதிர்தரப்பு மீது பழியைப் போட்டுவிட்டுக் களத்தை விட்டுத் தெறித்து ஓடுவது ஒரு தலைவனுக்கு அழகல்ல" என்று கூறியது மறைமுகமாக விஜயை விமர்சிப்பதாக த.வெ.க-வினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.சில இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதால் விஜய் சேதுபதியின் கருத்து பெரும் சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில் "பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள் மற்றும் நிகழ்வுகள் முற்றிலும் பொழுதுபோக்கு சார்ந்தவை மட்டுமே. நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள நபர்களையோ, அரசியல் இயக்கங்களையோ அல்லது அமைப்புகளையோ மையப்படுத்தி இந்த கருத்துகள் பேசப்படவில்லை. எனவே, இதை வெளியுலக நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி பார்ப்பது தவறானது" என்று விளக்கம் அளித்தது. இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனது 'அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின்' தலைமை ஒருங்கிணைப்பாளராக பி. பிரசாத் என்பவரை நியமித்துள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல், மாவட்ட மற்றும் மண்டல அளவில் அமைப்புகளின் பணிகளை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகளை உருவாக்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துதல் ஆகிய பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மன்ற அமைப்புகளை மறுசீரமைத்து வலுப்படுத்தும் விஜய் சேதுபதியின் இந்தத் தீவிர நடவடிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் பெருமளவில் கவனம் பெற்றுள்ளதுடன், அவரும் அரசியலில் களமிறங்க ஆயத்தமாகிறாரா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. அகில இந்திய விஜய்சேதுபதி நற்பணி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நியமனம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பி. பிரசாத்தின் சிறப்பான செயல்பாடு, அமைப்பின் மீதான ஈடுபாடு, நிர்வாகத் திறன் மற்றும் பங்களிப்பை கருத்தில் கொண்டு, தங்களை அகில இந்திய விஜய்சேதுபதி நற்பணி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இன்றுமுதல் நியமனம் செய்கிறேன். மாநிலம் முழுவதிலும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல், மாவட்ட மற்றும் மண்டல அளவிலான அமைப்பு பணிகளை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகளை உருவாக்குதல், உறுப்பினர் சேர்க்கையை மேம்படுத்துதல் மற்றும் மன்றத்தின் அனைத்து அமைப்பு சார்ந்த செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்தல் ஆகிய பொறுப்புகளை தாங்கள் மேற்கொள்ள வேண்டும். அமைப்பின் கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் தலைமை நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, ஒற்றுமையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்பட்டு, ரசிகர் மன்றத்தின் வளர்ச்சிக்கும் சிறப்பிற்கும் தங்களது முழுமையான பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இப்புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, மன்றத்தின் வளர்ச்சிக்கு மேலும் பலம் சேர்ப்பீர்கள் என நம்புகிறேன்.” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்ற அமைப்புகளை மறுசீரமைத்து வலுப்படுத்தும் இந்தத் தீவிர நடவடிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் பெருமளவில் கவனம் பெற்றுள்ளதுடன், அவரும் அரசியலில் களமிறங்க ஆயத்தமாகிறாரா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
பிக்பாஸ் சர்ச்சைக்கு பின் ரசிகர் மன்றத்தில் அதிரடி மாற்றம்: அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் சேதுபதி?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk