'மழை பெய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும்' - சம்பா சாகுபடிக்கு நீர் பற்றாக்குறை என டெல்டா விவசாயிகள் கவலை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
'மழை பெய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும்' - சம்பா சாகுபடிக்கு நீர் பற்றாக்குறை என டெல்டா விவசாயிகள் கவலை

பட மூலாதாரம், Getty Images கர்நாடகாவில் இருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் முழுமையாக கிடைக்காத நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பும் குறைந்து வருகிறது. இதனால் ஏற்கெனவே தாமதமாகத் தொடங்கிய சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியுமா என்ற கவலை டெல்டா விவசாயிகளிடம் எழுந்துள்ளது. காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு இப்போது முக்கியமான கேள்வி, தண்ணீர் திறக்கப்படுமா என்பது மட்டுமல்ல; தொடங்கிய சம்பா பயிரை அறுவடை வரை காப்பாற்றத் தேவையான தண்ணீர் கிடைக்குமா என்பதுதான். கர்நாடகா காவிரி நீரை உரிய அளவில் திறக்கவில்லை என்று கூறி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செப்டம்பர் 9 முதல் 23-ஆம் தேதி வரை பிலிகுண்டுலுவில் தினமும் 6,000 கனஅடி நீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவின்படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 9-ஆம் தேதி பிலிகுண்டுலுவில் சராசரியாக 4,218 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், செப்டம்பர் 10-ம் தேதி 2,412 கனஅடியாகவும், செப்டம்பர் 11-ம் தேதி 1,695 கனஅடியாகவும் குறைந்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 1 முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரையிலான காலத்தில் கர்நாடகா திறக்க வேண்டிய நீரில் சுமார் 16 டிஎம்சி பற்றாக்குறை இருப்பதாகவும், அந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியுள்ளது. இந்த நீர் பற்றாக்குறை விவசாயத்தை நேரடியாகப் பாதிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது குறுவை சாகுபடி ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையை ஜூன் மாதத்தில் திறக்க முடியாததால் சம்பா சாகுபடியும் தாமதமாகியுள்ளது. பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு மேட்டூர் அணையின் மொத்த நீர் கொள்ளளவு 93.4 டிஎம்சி. ஆனால், வியாழக்கிழமை நிலவரப்படி அணையில் 45.08 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவும் குறைவாகவே உள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4,960 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 12,020 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளபடி, தற்போதுள்ள நீர் இருப்பு பாசனத்துக்கு சுமார் 25 முதல் 30 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் அது நடைபெறவில்லை. பின்னர் செப்டம்பர் 1-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அப்போது, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், ஒரு நீண்டகால நெற்பயிரான சம்பாவுக்கு 45 நாட்கள் தண்ணீர் திறப்பது மட்டுமே போதுமா என்பது விவசாயிகளின் கேள்வியாக உள்ளது. சம்பா பயிருக்கு நெல் ரகத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் 120 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை தேவைப்படும் நிலையில், பாசனத்துக்கு 30 நாட்களுக்கான நீர் மட்டுமே இருப்பதாக அரசு கூறியிருப்பது விவசாயிகளின் கவலையை அதிகரித்துள்ளது. குறுவைக்கு ஏற்கெனவே போதிய தண்ணீர் கிடைக்காத நிலையில் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரும் கிடைக்காத நிலை இருப்பதாக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காவிரி தனபாலன் தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று சாகுபடி பருவங்களுக்கும் சேர்த்து சுமார் 180 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் என்றார். மேலும், "குறுவைக்கு ஏற்கெனவே போதிய தண்ணீர் கிடைக்காத நிலையில், சம்பா சாகுபடிக்கு மட்டும் குறைந்தது 90 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் மேட்டூர் அணையின் நீர் இருப்பை கணக்கிட்டால் சுமார் 30 டிஎம்சி தண்ணீர்தான் கிடைக்கும். இனிமேல் மேலும் 60 டிஎம்சி தண்ணீர் கிடைத்தால் வறட்சி போன்ற நிலை ஏற்படாமல் விவசாயத்தை காப்பாற்ற முடியும்" என்று அவர் கூறினார். இந்த ஆண்டு சுமார் 11.35 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தனபாலன் தெரிவித்தார். "மழை பொய்த்தால், மோட்டார் பம்புகளை நம்பி சாகுபடி செய்யப்படும் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கரைத் தவிர, மற்ற பகுதிகளில் உள்ள பயிர்கள் பாதிக்கப்படும். இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சில இடங்களில் அதிக மழை கிடைத்தது. குறிப்பாக தருமபுரியில் அதிக மழை பெய்ததால், 24 மணி நேரத்தில் 284 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், மேட்டூர் அணைக்கு சுமார் 10 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது" என்று தனபாலன் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் சண்முகவடிவேல், காவிரி நீர் பகிர்வுக்கான மாதாந்திர ஒதுக்கீட்டை கர்நாடகா முறையாக வழங்குவதில்லை என்று கூறுகிறார். "கர்நாடகா ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய தண்ணீருக்கான ஒதுக்கீடு உள்ளது. ஆனால், அதை அவர்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். காவிரி டெல்டாவில் உள்ள பயிர்களுக்கு ஜூன் 12 முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும், திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள 19 முக்கியக் கால்வாய்கள் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். "மழை கிடைக்கும் அளவைப் பொறுத்து மேட்டூர் நீரைத் திட்டமிட்டு பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அந்த நிலை இல்லை. விவசாயிகள் முழுமையாக இயற்கையை நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி மழை பெய்தால் மட்டுமே விவசாயிகளைக் காப்பாற்ற முடியும். இல்லையெனில், கர்நாடகாவிடம் இருந்து விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற முதலமைச்சர் போராட வேண்டும்" என்று சண்முகவடிவேல் கூறினார். காவிரி நீர் பகிர்வு தொடர்பான ஒதுக்கீட்டின்படி, தமிழ்நாட்டுக்கு பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய மாதாந்திர அளவு ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஜூன் மாதத்துக்கான அளவு 9.19 டிஎம்சி, ஜூலை 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் 45.95 டிஎம்சி, செப்டம்பர் 36.76 டிஎம்சி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் 20.22 டிஎம்சி, நவம்பரில் 13.78 டிஎம்சி, டிசம்பரில் 7.35 டிஎம்சி, ஜனவரியில் 2.76 டிஎம்சி என அளவு குறைகிறது. பிப்ரவரி முதல் மே வரை ஒவ்வொரு மாதமும் 2.50 டிஎம்சி என ஒதுக்கீடு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை கிடைக்க வேண்டிய நீரில் ஏற்பட்ட பற்றாக்குறையையே தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. வேளாண்மைத் துறையின் தகவல்படி, இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மொத்தமாக 20.80 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 79 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், சம்பா மற்றும் தாளடி சாகுபடி குறித்து அரசு உடனடியாகத் திட்டமிட வேண்டும் என்று கோரியுள்ளார். குறுவை சாகுபடி ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முதன்மை ஆறுகளின் சில கடைமடைப் பகுதிகளைச் சென்றடைந்தாலும், பல கிளை ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களின் கடைமடைக்கு போதிய தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை என்று அவர் கூறுகிறார். சம்பா, தாளடி சாகுபடிக்கான இலக்கு, நீர் இருப்பு, எதிர்பார்க்கப்படும் வடகிழக்குப் பருவமழை ஆகியவற்றை கணக்கில் கொண்டு அரசு, வேளாண்மை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், உழவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதே அவரது முக்கியக் கோரிக்கை. இந்த விவகாரத்தில் திமுகவும் தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பதிவில், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை உரிய நேரத்தில் திறக்கவில்லை என்றும், பின்னர் செப்டம்பர் 1-ம் தேதி அணையைத் திறந்ததன் மூலம் சம்பா சாகுபடிக்கு போதிய கால அவகாசம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். தற்போதைய நீர்வரத்து மற்றும் மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி, கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதிலும், சம்பா பயிரின் முக்கிய வளர்ச்சிக் கட்டத்தில் பாசனம் கிடைப்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வேளாண்மைத் துறைச் செயலாளர் சுப்பையன், மழைப் பற்றாக்குறை தற்போது 20 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். "மழைப் பற்றாக்குறை சுமார் 25 சதவிகிதமாக இருந்தது. சமீபத்திய மழைக்குப் பிறகு அது 20 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இனி மழை உபரியாக இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது" என்று அவர் கூறினார். தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் நேரடி விதைப்பு முறையைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்குத் தேவையான விதைகள் கிடைக்குமா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவியை நாடியுள்ளதாகவும் சுப்பையன் தெரிவித்தார். மேலும், நீர்மட்டம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திங்கள்கிழமை ( செப்டம்பர் 21) ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகவும், நிலைமையை மதிப்பிட செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளிலும் தொடர்ந்து கூட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் கூறினார். விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைந்தபட்சமாக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக சுப்பையன் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை