தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் 2023: சர்ச்சை எழுந்தது ஏன்? தலைமை நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது ஏன்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் 2023: சர்ச்சை எழுந்தது ஏன்? தலைமை நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது ஏன்?

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனக் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கும் 2023-ஆம் ஆண்டின் சட்டத்தை எதிர்த்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, அதனை 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கத் தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எழுதியவர்:Amaal Sheikh இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை (ECs) நியமிப்பதற்கான 2023-ஆம் ஆண்டின் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வை அமைப்பது குறித்து பரிசீலிப்பதற்காகத் தலைமை நீதிபதியின் (CJI) பார்வைக்கு உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு புதன்கிழமை அனுப்பியுள்ளது. இந்த நியமனச் செயல்முறையிலிருந்து இந்தியத் தலைமை நீதிபதியை விலக்கி வைப்பதே இந்த சட்டத்தின் முதன்மை சவாலாகும். கூட்டு உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன? இந்த விவகாரத்தை ஒரு பெரிய அமர்வுக்கு அனுப்புவது குறித்து நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா இடையே கருத்து வேறுபாடு நிலவியபோதிலும், இதனைத் தலைமை நீதிபதியின் முன் வைப்பது என்பதில் இருவரும் உடன்பட்டனர். இந்த விவகாரத்தை முதலில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது குறைந்த மதிப்பையே தரும் என்றும், இது வழக்கில் எழுப்பப்பட்டுள்ள முக்கியமான அரசியலமைப்பு வினாக்கள் குறித்து இறுதி முடிவெடுப்பதைக் தாமதப்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அரசியலமைப்பு சார்ந்த வழக்குகளைத் தீர்மானிப்பதில் ஏற்படும் நீண்ட தாமதங்களை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அனூப் பரன்வால் வழக்கு (2023) இறுதித் தீர்ப்பை எட்ட எட்டு ஆண்டுகள் ஆனதையும், பிற வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர். இதுபோன்ற தாமதங்களை "நிறுவன ரீதியான சங்கடம்" என்று குறிப்பிட்ட அவர்கள், அரசியலமைப்பு வழக்குகளுக்காகப் நிரந்தரமான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைப்பது குறித்துத் தலைமை நீதிபதி பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ‘அனூப் பரன்வால்’ வழக்கு என்பது என்ன? தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) சட்டம், 2023-க்கு எதிரான சவாலின் தோற்றம், மார்ச் 2023-இல் அனூப் பரன்வால் எதிர் இந்திய யூனியன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இருந்து தொடங்குகிறது. அந்தத் தீர்ப்பில், அரசியலமைப்பின் 324-வது பிரிவு ஒரு சட்டத்தை எதிர்பார்க்கும் போதிலும், தேர்தல் ஆணைய நியமனங்களை நிர்வகிக்கும் சட்டத்தைப் நாடாளுமன்றம் இயற்றவில்லை என்பதை அரசியலமைப்பு அமர்வு சுட்டிக்காட்டியது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றும் வரை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழுவின் மூலம் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற இடைக்கால பொறிமுறையை அது வகுத்தது. சுதந்திரமான தேர்தல் ஆணையத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அந்த அமர்வு, தேர்தலை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்கள் நிர்வாகத்தின் செல்வாக்கிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) சட்டம், 2023-ஐ இயற்றியது. ஆனால், இந்தச் சட்டம் தேர்வுக்கமிட்டியில் இருந்த இந்தியத் தலைமை நீதிபதிக்கு பதிலாகப் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு ஒன்றிய அமைச்சரவை அமைச்சரைச் சேர்த்தது. இதன் மூலம், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தேர்வுக் குழுவில், எதிர்க்கட்சித் தலைவருடன் சேர்த்து அரசுக்கு இரண்டு பிரதிநிதிகள் கிடைத்தனர். அரசியலமைப்பு அமர்வு விவகாரம்: நீதிபதி தத்தா கூறியது தற்போதைய அமர்வே இந்த மனுக்கள் மீது முடிவெடுக்க முடியும் என்று நீதிபதி தத்தா கருதினார். அவரைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்திற்கான நியமனங்கள் "நிர்வாகத்தின் பிரத்யேகக் கட்டுப்பாட்டின் கீழ்" இருக்க முடியாது என்ற ஆட்சி செய்யும் அரசியலமைப்பு விதியை அனூப் பரன்வால் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்த்து வைத்துள்ளது. தற்போதைய கேள்வி என்னவென்றால், 2023-ஆம் ஆண்டு சட்டம் அந்த விதியுடன் இணங்குகிறதா என்பதுதான். அந்த நடவடிக்கை "வழக்கின் உண்மைகளுக்கு நிலைநிறுத்தப்பட்ட சட்ட விதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர வேறில்லை" என்றும், அதற்கு அரசியலமைப்பு அமர்வு தேவையில்லை என்றும் அவர் கூறினார். எனவே, "தற்போதைய அமர்வு இந்த மனுக்களை விசாரிப்பதற்கு எந்தவொரு அரசியலமைப்புத் தடையும் அல்லது முன்னுதாரணமும் தடையாக இல்லை" என்று நீதிபதி தத்தா குறிப்பிட்டார். அதே நேரத்தில், 2023 சட்டத்தின் கீழ் உள்ளத் தேர்வுக் குழுவின் அமைப்பு குறித்து நீதிபதி தத்தா கவலைகளை வெளிப்படுத்தினார். பிரதமர், பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு அமைச்சரவை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழுவைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், கூட்டுப் பொறுப்பிற்கு உட்பட்ட ஒரு அமைச்சர் தன் சொந்தப் பரிந்துரையாளரையே எதிர்க்க முடியாது என்று அவதானித்தார். இதனால், தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் இருப்பு "பெரும்பாலும் அலங்காரப் பொருளாக" மாறுகிறது என்றார். மேலும் "தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருப்பது மட்டும் போதாது, அது சுதந்திரமாக இயங்குவது போல் தோற்றமளிக்கவும் வேண்டும்" என்ற பார்வைத்திறன் சோதனையையும் அவர் வலியுறுத்தினார். நியமனங்கள் மீது நிர்வாகத்திற்கு அபாரமான செல்வாக்கை இந்தச் சட்டம் வழங்குகிறது என்ற மனுதாரர்களின் வாதம் "உண்மைத்தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது" என்று கூறிய அவர், இவை முதற்கட்ட அவதானிப்புகள் மட்டுமே என்றும் தெளிவுபடுத்தினார். நீதிபதிகள் நியமனத்திற்கான கொலீஜியம் முறைக்கும் தேர்தல் ஆணையத் தேர்வு முறைக்கும் இடையே அரசு ஒப்பீடு செய்ததை நீதிபதி தத்தா நிராகரித்தார். நீதிபதிகள் நியமனத்தில் பல கட்டங்களில் நிர்வாகம் ஈடுபடுகிறது என்று கூறிய அவர், "நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கிறார்கள்" என்ற பிரபலக் கருத்தை ஒரு " கட்டுக்கதை" என்று விவரித்தார். கொலீஜியம் பரிந்துரைகளைத் தேர்ந்தெடுத்து அமல்படுத்துவது குறித்துக் கவலை தெரிவித்த அவர், கொலீஜியத்தில் நடுநிலையான உறுப்பினர் இல்லாதது, தேர்தல் ஆணைய நியமனச் செயல்பாட்டில் நடுநிலையான உறுப்பினர் இல்லாத நியாயப்படுத்த முடியாது என்றார். அரசு செய்த ஒப்பீட்டை "நேர்மையற்றது, மழுப்பலானது மற்றும் கவலையளிப்பது" என்றும் அவர் விவரித்தார். அரசியலமைப்பு அமர்வு விவகாரம்: நீதிபதி சர்மா கூறியது நீதிபதி தத்தாவின் கருத்துடன் கருத்து வேறுபாடு கொண்ட நீதிபதி சர்மா, இந்தச் சவாலை அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். 2023 சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை உச்ச நீதிமன்றம் முதல்முறையாக ஆய்வு செய்கிறது என்று அவர் கூறினார். "இந்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை குறித்து உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான தீர்ப்பு இதுவரை எதுவும் இல்லை" என்று கூறிய அவர், "இந்த எழுத்துப்பூர்வ மனுக்களின் மீதான முடிவு முதன்முறையாக அமையப்போகிறது, எனவே ஒரு வழிகாட்டல் பரிந்துரை செய்வது மிகவும் அவசியமானது" என்றும் கூரினார். இருப்பினும், சுதந்திரமான செயல்முறையாக நியமனம் இருக்க வேண்டும் என்ற மத்திய சட்டக் கேள்வி 2023 அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று மனுதாரர்கள் வாதாடியிருந்தனர். நீதிபதி சர்மாவைப் பொறுத்தவரை, தலைமை நீதிபதிக்கு பதிலாகப் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு அமைச்சரவை அமைச்சரை நியமித்ததில் நாடாளுமன்றம் நியாயமானதா என்பதே முக்கியக் கேள்வியாக இருந்தது. "தேர்வுக் குழுவில் ஒரு நடுநிலையான நபரை சேர்க்காததில் நாடாளுமன்றம் நியாயமானதா இல்லையா" என்பது "இந்த நீதிமன்றத்தின் முன் முதன்முறையாக எழும் ஒரு முக்கியமான கேள்வி" என்று அவர் கூறினார். இந்த கேள்வி "எந்தவொரு முன்னுதாரணத்திலும் கையாளப்படவில்லை" என்பதால், அரசியலமைப்பின் 145(3) பிரிவு, "தற்போதைய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் மூலம் இத்தகைய கேள்விக்கு இறுதியாக முடிவெடுப்பதற்கு இடம் வைக்கவில்லை" என்று அவர் கூறினார். அதிகாரப் பகிர்வு மற்றும் கொலீஜியம் அமைப்புடனான ஒப்பீடு குறித்து அரசு முன்வைத்த வாதங்களை, பெரிய அமர்வால் பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயங்களாக அவர் பார்த்தார். அரசியலமைப்பு அமர்வு என்றால் என்ன? அரசியலமைப்பின் 145(3) பிரிவின்படி, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அரசியலமைப்பின் விளக்கத்தை உள்ளடக்கிய "முக்கியமான சட்டக் கேள்வியை" தீர்மானிக்கிறது. ஒரு வழக்கு அரசியலமைப்பை உள்ளடக்கியது என்பதற்காக மட்டுமே அது பெரிய அமர்வுக்குச் செல்வதில்லை. அந்த கேள்வி "தீர்மானிக்கப்படாததாக" இருக்க வேண்டும் அதாவது நீதிமன்றம் இதற்கு முன் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்காத ஒன்றாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு அமர்வின் தீர்ப்புகள் சாதாரண தீர்ப்புகளை விட அதிக எடையும் கொண்டவை. பிரிவுபட்ட தீர்ப்புகள் பெரும்பாலும் இத்தகைய பரிந்துரைகளைத் தூண்டுகின்றன. இரண்டு நீதிபதிகள் உடன்பட முடியாதபோது, இந்த விவகாரம் தலைமை நீதிபதியிடம் செல்லும், அவர் அதை பெரிய அமர்வுக்கு அனுப்ப வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பார். ஆனால் அந்தப் பிளவு மட்டுமே தானாகவே ஓர் அரசியலமைப்பு அமர்வுக்கு உத்தரவாதம் அளிப்பதாகாது இந்தத் தகராறு அதிகாரப்பூர்வமான தீர்மானம் தேவைப்படும் ஒரு முக்கிய அரசியலமைப்பு கேள்வியை எழுப்புகிறது என்பதை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டும். அக்டோபர் 2022-இல், கர்நாடக ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றம் பிளவுபட்ட தீர்ப்பை வழங்கியது: நீதிபதி ஹேமந்த் குப்தா பள்ளிகளில் ஹிஜாப் தடையை உறுதி செய்தார், அதே நேரத்தில் நீதிபதி சுதன்ஷு துலியா அதை ரத்து செய்தார். இந்த விவகாரம் பெரிய அமர்வுக்கு அனுப்பப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் நிலுவையில் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A குறித்து மற்றொரு பிளவுபட்ட தீர்ப்பு வந்தது: நீதிபதி கே.வி விஸ்வநாதன் இந்த விதியை உறுதி செய்தார், நீதிபதி பி.வி நாகரத்னா இதை "நேர்மையானவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதை விட ஊழல்வாதிகளைப் பாதுகாக்கிறது" என்று கூறி ரத்து செய்தார். அதுவும் ஒரு பெரிய அமர்வுக்குச் சென்றது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை