MBBS Admission: அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்கு சாய்ஸ் ஃபில்லிங் தொடக்கம்; யார் எல்லாம் கலந்தாய்வில் பங்கேற்கலாம்? தமிழகத்தில் எவ்வளவு இடங்கள் உள்ளன? நிபுணர் விளக்கம் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன? யார் எல்லாம் கலந்தாய்வில் பங்கேற்கலாம்? என்பது குறித்து இப்போது பார்ப்போம். நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து மூன்றாம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்தநிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன? யார் எல்லாம் கலந்தாய்வில் பங்கேற்கலாம்? தமிழகத்தில் எவ்வளவு இடங்கள் உள்ளன? என்பது குறித்து மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் விளக்கியுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் அகில இந்திய மருத்துவ கலந்தாய்வின் மூன்றாம் சுற்றுக்கு 5922 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சில இடங்களும், சுயநிதி மருத்துவ பல்கலைக்கழகங்களில் அதிக அளவிலான இடங்களும் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அகில இந்திய ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 153 இடங்களும், சுயநிதி பல்கலைக்கழகங்களில் 1316 இடங்களும் என மொத்தம் 1469 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. இந்த மூன்றாம் சுற்று கலந்தாய்வில், ஏற்கனவே சீட் கிடைத்து மாற்ற விரும்புபவர்கள், இதுவரை சீட் கிடைக்காதவர்கள், இதுவரை கலந்தாய்விலே பங்கேற்காதவர்கள் என அனைவரும் கலந்துக் கொள்ளலாம். மூன்றாம் சுற்றில் சீட் கிடைத்தால் கட்டாயம் அந்த கல்லூரியில் சேர்க்கை பெற வேண்டும். சீட் கிடைத்து சேர்க்கை பெறாவிட்டால் வைப்புத்தொகை (டெபாசிட்) திரும்பக் கிடைக்காது. இரண்டாம் சுற்றில் சீட் கிடைத்து கல்லூரியில் சேர்ந்து இருந்தால், அங்கு செலுத்திய கல்வி கட்டணம் திரும்பக் கிடைக்காது. மேலும் அடுத்தடுத்த சுற்று கலந்தாய்வுகளில் பங்கேற்க முடியாது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அகில இந்திய மருத்துவ கவுன்சலிங் ரவுண்ட் 3; தமிழகத்தில் 1469 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk