காலத்திற்கேற்ப உங்களை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் பின்தங்கிவிடுவீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இப்போதே இல்லாத பல புதிய தொழில்கள் உருவாகும்; அவற்றின் பெயர்கள் கூட நமக்கு இப்போதைக்குத் தெரியாது. தோல்விகளால் சோர்ந்துவிடாதீர்கள், பெரிய இலக்குகளை நிர்ணயியுங்கள்: பட்டதாரிகளுக்கு என். சந்திரசேகரன் அறிவுரை சென்னையில் நடைபெற்ற சாய் பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், புதிய உலகிற்கு அடியெடுத்து வைக்கும் இளைய சமுதாயத்தினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல முக்கியமான ஆலோசனைகளை வழங்கினார். இளம் பட்டதாகரிகள் முன்னிலையில் அவர் பேசியதாவது, “புதிய தொழில் உலகிற்குள் அடியெடுத்து வைக்கும் பட்டதாரிகளே, நீங்கள் எவ்விதச் சவால்களையும் கண்டு அஞ்சக் கூடாது. தோல்விகளைத் தடுத்து நிறுத்தக் கூடியவையாகப் பார்க்காமல், அவற்றை உங்கள் உத்வேகத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளாகக் கருத வேண்டும். பெரிய, தைரியமான இலக்குகளை நிர்ணயியுங்கள். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல், உங்கள் சொந்த முன்னேற்றத்தை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளுங்கள். நவீன தொழில் சூழலில் நிலவும் உயர் அழுத்தச் சூழலையும், சிக்கலான பிரச்சினைகளையும் கண்டு பயப்பட வேண்டாம். மாறாக, அந்த அழுத்தத்தை ஒரு 'பாக்கியமாகவும்', தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான தனித்துவமான வாய்ப்பாகவும் கருதி எதிர்கொள்ளுங்கள். இன்றைய உலகப் பொருளாதாரம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதிவேக தொழில்நுட்ப மாற்றங்களால் மாறி வருகிறது. இந்தச் சூழலில், இந்தியா தனது வரலாற்றிலும் உலக அளவிலும் இதுவரை கண்டிராத இணையற்ற பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. முறையான கல்வி என்பதுடன் படிப்பு முடிந்துவிடுவதில்லை. தொழில்நுட்பத் துறையின் வேகத்திற்கு ஏற்ப, நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொள்வது அவசியம். காலத்திற்கேற்ப உங்களை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் பின்தங்கிவிடுவீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இப்போதே இல்லாத பல புதிய தொழில்கள் உருவாகும்; அவற்றின் பெயர்கள் கூட நமக்கு இப்போதைக்குத் தெரியாது. அலுவலகப் பணிகள் மற்றும் வழக்கமான தரவு செயலாக்கங்களைச் செய்ய ஏ.ஐ. கருவிகளைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் கிடைக்கும் நேரத்தை ஆக்கப்பூர்வமான மூலோபாய சிந்தனைக்குச் செலவிடுங்கள். வணிகத்தில் படைப்பாற்றலுக்கு எப்போதும் அதிக மதிப்பு உண்டு. எனவே, தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு, வளர்ந்து வரும் ஏ.ஐ. துறைகளில் 'முன்னோடி பயனாளிகளாக' (Early Adopters) மாறுங்கள். நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். குறுகிய கால வெற்றிகள் மூலம் வேகத்தை உருவாக்குங்கள்; அதே சமயம் உங்கள் நீண்ட கால லட்சியங்களில் இருந்து விலகாமல் உறுதியாக நில்லுங்கள். என் சொந்த அனுபவத்திலிருந்து ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். புகழ்பெற்ற மாரத்தான் வீரர் ஜுமா இகாங்காவின் (Juma Ikangaa) கூற்றுப்படி, "வெற்றி பெறுவதற்கான ஆர்வம் என்பது, அதற்குத் தேவையான முன் தயாரிப்பு இல்லாத எந்த மதிப்பும் பெறாது." உங்கள் எதிர்காலப் பயணத்தில் விடாமுயற்சியோடு படியுங்கள், மிகப்பெரிய வெற்றிகளை அடையுங்கள். என் வாழ்த்துகள்” இவ்வாறு என். சந்திரசேகரன் பட்டமளிப்பு விழாவில் பேசினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
சென்னையில் மாணவர்கள் மத்தியில் டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன்: 'பின்னடைவுகளைப் பார்த்து தளர்ந்து விடக்கூடாது' என பேச்சு
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk