ரஷ்ய அதிபர் தேர்தல்.. மீண்டும் புதின் வெற்றி.. மாஸ் காட்டிய ஆளும் கட்சி! ஆடிப்போன எதிர்க்கட்சிகள்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
ரஷ்ய அதிபர் தேர்தல்.. மீண்டும் புதின் வெற்றி.. மாஸ் காட்டிய ஆளும் கட்சி! ஆடிப்போன எதிர்க்கட்சிகள்!

செய்தியாளர் - கார்த்திகேயன் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போரால், ரஷ்யாவிலும், உக்ரைனிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், தங்களது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இந்தப் போருக்கு, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியினர் பலரும், தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், ரஷ்யாவில் புதினின் செல்வாக்கு குறைந்திருக்குமோ என்ற எண்ணம், உலக நாடுகள் மத்தியில் எழுந்திருந்தது. எனவே, ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தலில், தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு புதின் தள்ளப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான ஸ்டேட் டுமா (State Duma) தேர்தல் நடைபெற்றது. தற்போது, அந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் வேளையில், புதினின் யுனைடெட் ரஷ்யா கட்சி, வெற்றி முகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 90.43 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகளில் புதினின் யுனைடெட் ரஷ்யா கட்சி 57.86% வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளது. யுனைடெட் ரஷ்யா கட்சியை எதிர்த்து வலுவான மாற்று சக்திகள் இல்லாதபோதிலும், இதர சில கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இடங்களைப் பெற்றுள்ளன. ரஷ்யக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சி 13.84% வாக்குகளையும், லிபரல் டெமாக்ரேட்டிக் கட்சி 8.9 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. மேலும், புதிய மக்கள் கட்சி 7.94 சதவீத வாக்குகளையும், A Just Russia என்ற கட்சி 4.95 சதவீத வாக்குகளையும் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய மக்கள் கட்சிக்கு மக்கள் அளிக்கும் வாக்குகள், பொருளாதார நெருக்கடி மற்றும் போரின் தாக்கத்தால் புதினின் மீதுள்ள அமைதியான எதிர்ப்பின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை