CSK-வின் தலைமை பயிற்சியாளராக `ஜாகீர் கான்’.. வெளியான அறிவிப்பு!!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Sports ✍️
CSK-வின் தலைமை பயிற்சியாளராக `ஜாகீர் கான்’.. வெளியான அறிவிப்பு!!

ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டான 2008-இல் ஒரு வீரராக சென்னை அணியில் இணைந்த பிளெமிங், அடுத்த ஆண்டான 2009 முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். கடந்த 17 ஆண்டுகால அவரது பயிற்சியின் கீழ், சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளது. எனினும், கடந்த 3 ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத காரணத்தால் பயிற்சியாளர் பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் விலகினார் ஸ்டீபன் பிளெமிங். இரு தரப்புக்கும் இடையே நடந்த சுமுகமான மற்றும் நேர்மையான ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்த பரஸ்பர முடிவு எட்டப்பட்டதாக கூறப்பட்டது. இந்தச்சூழலில் தான், புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கனை தலைமைப் பயிற்சியாளராக்க அணி நிர்வாகம் விரும்பிய நிலையில், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவை இந்தியர்களை மையமாகக் கொண்டு அமைக்க வேண்டும் என தோனி விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இந்தச்சூழலில் தான், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடிய ஜாகீர் கான், 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றினார். ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர் கான், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 2017 ஆம் ஆண்டு இந்திய அணியில் வேகப்பந்து ஆலோசகர், பின்னர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணி பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. #AskLeo is taking a little break. 👀Leo is busy right now, but you got the answer to that “except one question” 💛 https://t.co/PpcpnEqix0 இந்த நியமனம் தொடர்பாக சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத் பேசுகையில், ஜாகீர் கானின் சிறப்பான விளையாட்டு அனுபவம் மற்றும் இளம் வீரர்களை வளர்க்கும் திறன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான பலமாக இருக்கும் அவரது வழிகாட்டுதல் அணியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார். சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன், ஜாகீர் கான் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர், குறிப்பாக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பல ஆண்டுகளாக சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறார் எனவும் அவரை வரவேற்பதில் ஆவலாக உள்ளோம் எனவும் பேசியிருக்கிறார். தொடர்ந்து, இந்த நியமனம் குறித்துப் பேசியுள்ள ஜாகீர்கான், ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சிஎஸ்கே அணியில் இணைவது பெருமையாக உள்ளது. ஒரு வீரராக சென்னை அணிக்கு எதிராக விளையாடிய போட்டிகளை நான் வெகுவாக ரசித்தேன். சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் உருவாக்கும் சூழல் மிகவும் சிறப்பாக இருக்கும். சென்னை அணியுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு உள்ளேன் எனத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், வரும் ஐபிஎல் தொடரிலாவது சிஎஸ்கே Come back கொடுக்குமா? என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை