ரஜினி படத்தில் மைக்கேல் ஜாக்சன்.. நிறைவேறாமல் போன ரஹ்மானின் கனவு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️
ரஜினி படத்தில் மைக்கேல் ஜாக்சன்.. நிறைவேறாமல் போன ரஹ்மானின் கனவு!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படங்களில் ஒன்றாக உருவாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம் ‘எந்திரன்’. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த இப்படத்திற்கு A.R. Rahman இசையமைத்திருந்தார். தற்போது இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘எந்திரன்’ படத்திற்காக உலகப் புகழ்பெற்ற பாப் நட்சத்திரம் Michael Jackson-உடன் இணைந்து பணியாற்ற A.R. Rahman திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார். அந்த விஷயம் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. ‘Honest Townhall’ நிகழ்ச்சியில் பேசிய தமன் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது A.R. Rahman மற்றும் Michael Jackson இடையிலான இந்த நிறைவேறாத இசைக் கூட்டணி குறித்தும் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “ ‘எந்திரன்’ படத்துக்காக மைக்கேல் ஜாக்சனுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து ஒரு பாடலில் பணியாற்றத் திட்டமிட்டிருந்தார். மே மாதம் அதற்கான ஒப்பந்ததை முடித்தார், ஆனால் ஜூன் மாதம் மைக்கேல் இறந்துவிட்டார். அவர் இருந்திருந்தால், மைக்கேல் ஜாக்சன் - ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி ரஜினிகாந்த் படத்தில் நடந்திருக்கும்" எனக் கூறினார். இந்தக் கூட்டணி இணைய திட்டமிட்டது இதற்கு முன்புகூட ஒருமுறை நடந்தது. 2009-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற பிறகு Los Angeles-ல் Michael Jackson-ஐ சந்தித்ததாக Rahman தெரிவித்திருந்தார். அந்த சந்திப்பில் இருவரும் இசை மற்றும் உலக அமைதி குறித்து பேசியதாகவும், Michael Jackson தனது குழந்தைகளை Rahman-க்கு அறிமுகப்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், ‘We Are The World’ போன்ற மற்றொரு பாடலை இணைந்து உருவாக்கலாம் என்ற எண்ணத்தையும் Michael Jackson தெரிவித்ததாக Rahman பகிர்ந்திருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு இந்தியா திரும்பிய A.R. Rahman, இயக்குநர் ஷங்கரிடம் Michael Jackson உடனான சந்திப்பு குறித்து தெரிவித்ததாகவும், அதன் பின்னர் ‘எந்திரன்’ படத்திற்காக Michael Jackson-ஐ இணைத்துக்கொள்ள முடியுமா என்ற யோசனை உருவானதாகவும் Rahman முன்பு கூறியிருந்தார். ரஜினிகாந்தின் ‘எந்திரன்’, A.R. Rahman-ன் இசை மற்றும் Michael Jackson-ன் சர்வதேச புகழ் — இந்த மூன்றும் ஒரே இசைப் படைப்பில் இணைந்திருந்தால் அது இந்திய சினிமாவின் மிகப் பெரிய சர்வதேச இசை கூட்டணிகளில் ஒன்றாக அமைந்திருக்கும். ஆனால் Michael Jackson-ன் திடீர் மறைவு அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமன் வெளியிட்டுள்ள இந்த தகவல், ‘எந்திரன்’ படத்துடன் தொடர்புடைய நிறைவேறாத ஒரு பிரம்மாண்ட இசைக் கனவை மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை