\"மோடி தான் காப்பாத்தணும்..\" சவுதியில் இலங்கை தமிழருக்கு மரண தண்டனை! இந்தியாவின் உதவி கேட்டு கோரிக்கை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
\"மோடி தான் காப்பாத்தணும்..\" சவுதியில் இலங்கை தமிழருக்கு மரண தண்டனை! இந்தியாவின் உதவி கேட்டு கோரிக்கை

கொழும்பு: சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போட்ட விவகாரத்தில் சவுதி அரேபியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என இலங்கை எதிர்க்கட்சி எம்பி மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த பலரும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்வது பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வந்தது. இந்தியா மட்டுமின்றி தெற்காசியாவை சேர்ந்தவர்களும் கூட பலரும் சவுதி செல்வது வாடிக்கையாகவே இருக்கிறது. அப்படி தான் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞரான அனோஜன் சிவராசா என்பவரும் சவுதியில் வேலை செய்து வந்தார். இலங்கை தமிழர் கைது இதற்கிடையே அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட போஸ்ட் தொடர்பாக கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனோஜன் சிவராசா இதை கேட்டவுடன் ஆடிப்போனார். அவரது குடும்பத்தினரும் இப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த தண்டனை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ உத்தரவுக்காக காத்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், மரண தண்டனை விதிக்கப்பட்டது உண்மை என்றே சவுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை எதிர்க்கட்சி எம்பி மனோ கணேசன் சில கருத்துகளை கூறியிருக்கிறார். அதாவது இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக பேச வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "அனோஜன் சிவராசாவின் நிலையை உங்கள் நண்பரும், இலங்கை ரத்னா விருது பெற்றவருமான பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கும் சவுதி பிரதமரும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானுக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாக குறிப்பிட்ட மனோ கணேசன், மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு உதவுமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கல்முனை அருகே உள்ள நட்பிட்டிமுனையை சேர்ந்த அனோஜன் சிவராசா, வேலைக்காக சுமார் 9 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா சென்றதாக தெரிகிறது. இந்தச் சூழலில் தான் அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், முதலில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், பிறகு அது மரண தண்டனையாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்றத்தின் எழுத்தப்பூர்வ உத்தரவு இதுவரை கிடைக்கவில்லை. சவுதி நீதித்துறை அதிகாரிகளும் இதை உறுதி செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சகம், சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அனோஜன் சிவராசாவை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த தீர்ப்பை எதிர்த்த்து சவுதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஒரு மாதத்துக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என அனோஜனின் வழக்கறிஞர் இலங்கை தூதரகத்திடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இலங்கை தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்காகவும் உதவும் என தெரிகிறது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை